www.garudabazaar.com

MM கீரவாணிக்கு ஆஸ்கர் அறிவிச்ச உடனே.. ராஜமௌலி குடும்பத்தினர் கொடுத்த ரியாக்ஷன்.. வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

MM கீரவாணிக்கு ஆஸ்கர் அறிவித்த உடனேயே அங்கிருந்த ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Rajamouli Family Reaction while Oscar Announced for Keeravani

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LEO லோகேஷ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சஞ்சய் தத் & மலையாள வில்லன் நடிகர்.. TRENDING

ஆஸ்கர் 2023

சினிமா கலைஞர்களின் உச்சபட்ச கனவாக இருக்க கூடியது ஆஸ்கர் விருதை வெல்வதாகத்தான் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைபடங்களை, கலைஞர்களை அங்கீகரித்து விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையுடன் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் The Elephant Whisperers சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இப்படம் ஆஸ்கார் விருது வென்றுள்ளது.

Rajamouli Family Reaction while Oscar Announced for Keeravani

Images are subject to © copyright to their respective owners.

RRR

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட திரைப்படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.

நாட்டு நாட்டு

பிரபல இசையமைப்பாளர் மரகதமணி எனும் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது. இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். அது முதல் ஆஸ்கரை வெல்லுமா நாட்டு நாட்டு பாடல்? என ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழுந்தது. கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றனர்.

Rajamouli Family Reaction while Oscar Announced for Keeravani

Images are subject to © copyright to their respective owners.

வீடியோ

நேற்றைய ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது நாட்டு நாட்டு பாடலுக்கு அறிவிக்கப்பட்ட உடன், அங்கிருந்த அனைவரும் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். அப்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த இயக்குநர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தோஷத்துடன் எழுந்து நின்று அந்த தருணத்தை கொண்டாடினர்.

Also Read | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்.. LEO ஷூட்டிங்கில் கொண்டாட்டம் 😍.. வைரல் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Rajamouli Family Reaction while Oscar Announced for Keeravani

People looking for online information on MM Keeravani, Oscar, Oscar 2023, Rajamouli Family, S S Rajamouli will find this news story useful.