www.garudabazaar.com

சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்ற All Quiet on the Western Front படம் சொல்வது என்ன..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது.

All Quiet on the Western Front wins best international film Oscar

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Oscars 2023 : ஆஸ்கார் மேடையில் ஆரவாரம் .. அசரவெச்ச RRR நாட்டு நாட்டு பாடல்..! வைரலாகும் வீடியோ

இந்த 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் விருது வென்றுள்ளது. இதேபோல், முதுமலையில் தயாரான ‘The Elephant Whisperers’ ஆவணப்படம் சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கார் விருது வென்றுள்ளது.

இந்நிலையில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த "ALL QUIET ON THE WESTER FRONT" திரைப்படம் வென்றுள்ளது.  அத்துடன் சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதையும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதையும், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும், இப்படம் வென்றுள்ளது.

All Quiet on the Western Front wins best international film Oscar

Images are subject to © copyright to their respective owners.

கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஜெர்மன் மொழி திரைப்படமான  “ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்” போரின் துயரத்தை கவித்துவமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் திரையில் சித்தரித்துள்ளது, 1929-ல் எரிக் மரியா ரீமார்க் எழுதிய போர் எதிர்ப்பு நாவலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் முதல் உலகப்போரின் இறுதி 18 மாதங்களில் ஒரு இளம் ஜெர்மன் சிப்பாய் எதிர்கொள்ளும் துயரங்களை காட்டுகிறது.

1917-ஆம் ஆண்டு ஒரு வசந்த காலத்தில் தனது மூன்று பள்ளி நண்பர்களுடன் பால் பாமர் தேசபக்தி மற்றும் பெருமை நிறைந்த கனவுகளுடன், ராணுவத்தில் சேர்கின்றனர். ஆனால்வெஸ்டர்ன் ஃப்ரண்ட்க்கு அவர்கள் வந்த சில மணி நேரங்களிலேயே  அந்த கனவு சிதைகிறது. ஆம், தங்கள் கண்ணுக்கு முன்னால் மில்லியன் கணக்கானவர்கள் இறந்து மடிய, போர்க்களத்தில் மூத்த போர் வீரரான “Kat” என்கின்ற  Katczinskyஐ பால் பாமர் உள்ளிட்ட நண்பர்கள் சந்திக்கின்றனர்.

All Quiet on the Western Front wins best international film Oscar

Images are subject to © copyright to their respective owners.

அங்கு கேட் ஒரு தந்தையாக இவர்களை வழிநடத்துகிறார். இதனிடையே கேட் மற்றும் பால் இடையிலான தோழமையான நல்லுறவு உள்ளிட்டவை உணர்வுகளுடன் காட்சிப்படுத்தப் படுகின்றன. இயக்குநரும் இணை எழுத்தாளருமான எட்வர்ட் பெர்கர் போரில் நடக்கும் சண்டையையும், வீம்பான அரசியல் வேட்கைக்காக படைத்தளபதிகள், இளையோரை போருக்கு அனுப்பி பலியாக்குவதையும் போகிற போக்கில் மௌனமாக காட்சிப்படுத்துகிறது திரைப்படம்.

குறிப்பாக போரில் சிதறுண்டு கிடக்கும் உடல்கள், சேறு படிந்த வாகனங்கள்,  தாக்குதலால் ஏற்படும் நில சிதைவு, பொருள் அபாயம் என பலவற்றையும் சிறந்த பின்னணி இசை, போர்சூழலை கண்முன் நிறுத்திய தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஆடை வடிவமைப்பு மூலமாக கொணர்ந்துள்ள இப்படம் சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது.

Also Read | Oscars 2023 : ஆஸ்கார் மேடையில் ஆரவாரம் .. அசரவெச்ச RRR நாட்டு நாட்டு பாடல்..! வைரலாகும் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

All Quiet on the Western Front wins best international film Oscar

People looking for online information on All Quiet on the Western Front, Netflix will find this news story useful.