www.garudabazaar.com

Naatu Naatu : ஆஸ்கார் விருது பெற்ற பின்.. MM கீரவாணி பாடிய பாடல்.. வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆஸ்கர் மேடையில் இசையமைப்பாளர் கீரவாணி பாடலில் தனது எண்ணங்களை வெளிப்படுத்த அரங்கமே கைதட்டுகளாலும் ஆராவாரத்தாலும் ஆர்ப்பரித்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Keeravani Oscar acceptance speech video goes viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Oscars 2023 : ஆஸ்கார் விருது வென்ற RRR நாட்டு நாட்டு பாடல்..! விருது பெற்ற MM கீரவாணி, சந்திரபோஸ் | Naatu Naatu

ஆஸ்கர் 2023

சினிமா கலைஞர்களின் உச்சபட்ச கனவாக இருக்க கூடியது ஆஸ்கர் விருதை வெல்வதாகத்தான் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைபடங்களை, கலைஞர்களை அங்கீகரித்து விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையுடன் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

Keeravani Oscar acceptance speech video goes viral

Images are subject to © copyright to their respective owners.

RRR

RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது. இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.

கீரவாணி

பிரபல இசையமைப்பாளர் மரகதமணி எனும் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த படம் சிறந்த பாடல் மற்றும் சிறந்த அந்நிய நாட்டு திரைப்படம் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.

Keeravani Oscar acceptance speech video goes viral

Images are subject to © copyright to their respective owners.

இதில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது. இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். அது முதல் ஆஸ்கரை வெல்லுமா நாட்டு நாட்டு பாடல்? என ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழுந்தது. கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றனர்.

பாடல்

இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டவுடன் அங்கிருந்த அனைவருமே உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். இதனிடையே ஆஸ்கரை வென்ற பிறகு பேசிய கீரவாணி,"அகாடமிக்கு நன்றி. நான் கார்பெண்டர்ஸ்-ன் (அமெரிக்க இசைக்குழு) பாடல்களை கேட்டு வளர்ந்தவன். தற்போது ஆஸ்கரை வென்றுள்ளேன்" என்றார். தொடர்ந்து,"என்னுடைய மனதில் ஒரே ஆசைதான் இருந்தது. ராஜமவுலிக்கும் எனது குடும்பத்தினருக்கும் அந்த ஆசையே இருந்தது. RRR படம் ஆஸ்கரை வெல்ல வேண்டும். இது இந்தியர்களின் பெருமை. இந்த வெற்றி என்னை உலகின் உச்சியில் நிறுத்திவிட்டது" என பாடலாக பாடினார். கார்பெண்டர்ஸ்-ன் ஆன் டாப் ஆஃப் தி வேர்ல்டு பாடலை போலவே கீரவாணி பாடிய இந்த பாடல் அரங்கத்தினரை உற்சாகப்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | தமிழ்நாட்டின் முதுமலையில் தயாராகி ஆஸ்கார் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப்படம்! விபரம்.

தொடர்புடைய இணைப்புகள்

Keeravani Oscar acceptance speech video goes viral

People looking for online information on Keeravani Oscar, MM Keeravani, Naatu Naatu Song, Oscar 2023, RRR will find this news story useful.