www.garudabazaar.com

Naatu Naatu : கீரவாணியின் இத்தனை வருஷ இசைக்கு வெற்றி.. நாட்டு நாட்டு தமிழ்ப் பாடலாசிரியர் கார்க்கி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமா கலைஞர்களின் உச்சபட்ச கனவாக இருக்க கூடியது ஆஸ்கர் விருதை வெல்வதாகத்தான் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைபடங்களை, கலைஞர்களை அங்கீகரித்து விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையுடன் நடைபெறும்.

Lyricist Karky Wishesh for Naatu Naatu Won Oscars 2023

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்ற All Quiet on the Western Front படம் சொல்வது என்ன..?

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.  இப்படத்தின் இசையமைப்பாளர் & இந்த பாடலில் இசையமைப்பாளர் MM கீரவாணி மற்றும் நாட்டு நாட்டு ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷன் பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவரும் விருது பெற்றனர். 

இந்நிலையில் நாட்டு நாட்டு பாடலின் தமிழ்ப்பதிப்புக்கான வரிகளை எழுதிய மதன் கார்க்கி, “RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்றிருப்பது மகிழ்ச்சி. கூடுதல் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயமாக இருப்பது என்னவென்றால், நான் இந்த படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றி இப்பாடலின் தமிழ் பதிப்பை நான் எழுதினேன் என்பதுதான். இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தெலுங்கு பதிப்பின் பாடலாசிரியர் சந்திரபோஸ் மூவருக்கும் வாழ்த்துக்கள்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த பாடலை பாடிய கால பைரவா, ராகுல் சிப்ளிகுஞ்ச் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இந்த பாடலை நடனத்தின் மூலம் உலகெங்கும் எடுத்துச் சென்ற ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆருக்கு வாழ்த்துக்கள். இந்த பாட்டுக்கு நடனம் அமைத்த பிரேம்க்கு வாழ்த்துக்கள். இந்தப் பாடல் எழுதும் போது ஒளிப்பதிவு செய்யும் பொழுது திரைப்படமாகும் போது என ஒவ்வொன்றிலும் இந்த பாடல் எனக்குள் பெரிதாகி வளர்ந்துகொண்டே இருந்தது. அதற்கு காரணம் என்றால் இந்த பாடலை வெறும் பாடலாக நான் பார்க்கவில்லை. இந்த பாடலை திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட கதை சூழலில் விஜயேந்திர பிரசாத் வைத்திருக்கிறார். அங்கு ஒரு போட்டி நடக்கிறது அதில் பகையை வீழ்த்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதில் நட்பு, காதல், தியாகம், அனைத்தும் இருக்கிறது. இப்படி எத்தனையோ உணர்ச்சிகளை ஒரே பாடலில் பூட்டி வைத்த ஒரு சிறிய குறும்படம் போலவே நான் இந்த பாடலை பார்க்கிறேன்.

Images are subject to © copyright to their respective owners.

எனவே இந்த பாடலுக்கான ஆஸ்கர் வெற்றி என்பது இந்த ஒரு பாடலுக்கானது இல்லை. இந்தப் பாடல் கீரவாணி இத்தனை ஆண்டுகளாக இசை அமைத்த அந்த அத்தனை பாடலுக்கும் சேர்த்து கிடைத்த வெற்றி. கீரவாணி ஒவ்வொரு பாடலின் மூலமாக திரைப்படத்தில் தன்னுடைய இசையின் தரத்தை உயர்த்தி கொண்டே செல்லக்கூடிய நோக்கத்துடன் செயல்பட்டு வந்திருக்கிறார். இத்தனை ஆண்டு காலமாக அவருடைய முயற்சி கிடைத்த வெற்றி. விஜயேந்திர பிரசாத் அவர்களுக்கும் முக்கியமாக நான் வாழ்த்து சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் இந்த கதை சூழலை சொல்லும் பொழுது இந்த வெற்றி என்பதை தாண்டி ஒரு பெரிய உணர்ச்சியை எல்லோராலையும் உணர முடிந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த பாடல் உலக அளவில் ஆஸ்கர் விருது வரை செல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்படியான ஒரு அங்கீகாரத்தை இந்த பாடல் அடைந்தது என்பது எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்தியாவில் இருக்கும் இன்னும் பல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் இயங்கும் கலைஞர்களுக்கும் இசை கலைஞர்களுக்கும் இந்த விருது ஊக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read | Oscar 2023 : ஆஸ்கார் விருதை தட்டித் தூக்கிய அவதார் 2 .. எந்த பிரிவில்.? Avatar: The Way of Water

தொடர்புடைய இணைப்புகள்

Lyricist Karky Wishesh for Naatu Naatu Won Oscars 2023

People looking for online information on Madhan Karky, MM Keeravani, Naatu Naatu, Oscars 2023, SS Rajamouli will find this news story useful.