தமிழ்நாட்டின் முதுமலையில் தயாராகி ஆஸ்கார் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப்படம்! விபரம்.
முகப்பு > சினிமா செய்திகள்அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது.
இந்நிலையில் இந்த 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஆஸ்கார் விருது வென்ற தமிழ் ஆவண குறும்படம் The Elephant Whisperers தற்போது பேசுபொருளாகியுள்ளது. முதுமலையில் தயாரான ‘The Elephant Whisperers' சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இப்படம் ஆஸ்கார் விருது வென்றுள்ளது.
ஆம், தமிழகத்தின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதி குறித்தும், அவர்களுக்கு யானையுடனான உறவு குறித்தும் உருக்கமாக இந்த ஆவணப்படத்தை இயக்கியிருந்தார் கார்த்திகி கொன்சால்வ்ஸ். இந்த ஆவணப்படத்தை தயாரித்திருந்தார் குனீத் மோங்கா.
Image : Netflix
நெட்பிளிக்ஸ் ஆவணப்படமான இப்படம் 41 நிமிடங்கள் ஒளிபரப்பாகக் கூடியது. 2 குட்டி யானைகளை வளர்ப்பது தொடர்பான இவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு நிறைவடைகிறது.