www.garudabazaar.com

'கபாலி' பொன்னம்பலத்துக்கு ஸ்லோ பாய்சன், குழிதோண்டி செய்வினை செய்த அண்ணன்..! பரபரப்பு பேட்டி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90கள் முதலே சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கி வருபவர் நடிகர் பொன்னம்பலம். பல திரைப்படங்களில் ஜிம் பாயாக தோன்றிய பொன்னம்பலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் வில்லனாக நடித்தார்.

actor Ponnambalam Interview reveals his brother betrayal

அனேகமான படங்களில் இவரை பொன்னம்பலம் என்று சொல்வதைவிட  ‘கபாலி’ என்று சொன்னால் தான் பலருக்கும் தெரிந்த ஒரு வில்லன் நடிகராக பரிச்சயமானவர். பொன்னம்பலம் இடையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.

இந்த நிலையில் பொன்னம்பலத்திற்கு கிட்னி கோளாறு காரணமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. முன்னதாக 2021 -ஆம் வருடம் பிஹைண்ட்வுட்ஸில் நடிகர் பொன்னம்பலம் அளித்த பேட்டியில், “பணம் இன்றி மருத்துவ செலவுகளுக்காக நான் போராடியது மிகவும் கொடுமையானது. 20-க்கும் மேற்பட்ட முறை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது. ” என இதுகுறித்து பேசியிருந்த விஷயம் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் பிப்ரவரி 10, 2023 அன்று வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நடிகர் பொன்னம்பலம் தனக்கு உதவிய நெஞ்சங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக நடிகர் பொன்னம்பலத்தின் 2வது அக்கா மகனும் விளம்பர பட இயக்குநருமான ஜெகந்நாதன் (35) தன் மாமா பொன்னம்பலத்துக்காக தனது சிறுநீரகத்தை கொடுத்துள்ளார். அவருக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோல் நடிகர்கள் கமல்ஹாசன், சிரஞ்சீவி, சரத்குமார், தனுஷ் ஆகிய நடிகர்கள் பொன்னம்பலத்துக்கு நிதி உதவி செய்தனர். அவர்களுக்கும் நன்றி சொல்லியிருந்தார் நடிகர் பொன்னம்பலம்.

இந்த நிலையில் தற்போது பிஹைண்ட்வுட்ஸில் பேட்டி அளித்திருக்கும் நடிகர் பொன்னம்பலம், “பலர் நான் குடிச்சேனா.. அதனால் இப்படி ஆனதா என கேட்டனர். ஆனால் நான் பாதிக்கப்பட்டவன். பின்னணியில் உள்ள கதை என்னவென்றால், என் அப்பாவுக்கு நான்கு மனைவிகள். அதில் மூன்றாவது மனைவியின் மகன் என்னுடைய அண்ணன். அவர் என் மேனேஜராக பணிபுரிந்தார். அவரை நான் மிகவும் நம்பினேன். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் எனக்கு ஸ்லோ பாய்சனை உணவில் கலந்து கொடுத்தது தெரியவந்தது. அது எப்படி தெரிய வந்தது என்றால் வீட்டுப் பின்புறம் ஒருநாள் இரவில் குழிதோண்டிக் கொண்டு இருந்தார்கள். அதில் என்னுடைய லுங்கி, என்னுடைய பொம்மை மற்றும் சில ஊமத்தை காய்கள் எல்லாம் போட்டு மாந்திரீகம், செய்வினை போல் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது போலீசில் புகார் கொடுத்து விடுவேன் என்று அவர்களை அதட்டி கேட்டபோதுதான் இந்த விவகாரத்தை என்னிடம் சொன்னார்கள். அப்போது நான் அதிர்ச்சி அடைந்தேன். இருப்பினும் எனக்கு என்ன மனம் என்றால் என்னுடைய சகோதரர் என்பதால் என்ன கொண்டு போகப் போறோம்.. அதனால் நான் அவற்றை மறந்துவிடுவேன், சின்ன வயதில் எங்களை பார்த்துக் கொண்டவர் எங்களுடைய அண்ணன். பெரிதாக இல்லை என்றாலும் சில காலம் அவர் பார்த்துக் கொண்டதால் அந்த நன்றிக்காக மீண்டும் திருப்பி அவருக்கு நான் மருத்துவ உதவியில் இருந்து அவருடைய குடும்பத்திற்காக நிதி உதவி வரை அனைத்தையும் செய்தேன். வீட்டு வாடகை கொடுக்க உதவி செய்தேன்.

ஆனால் என்னுடைய 27 வது வயதில் நான் வீடு கட்டினேன். அது அவருக்கு செரிமானமாகவில்லை போலிருக்கிறது. அதனால் இப்படி அவர் நினைத்திருப்பது தெரிய வந்து அதிர்ந்தேன். எனினும் என்னதான் செய்வினை வைத்தாலும் கடவுள் என்னுடன் இருந்திருக்கிறார், மக்களின் அன்பும் ஆதரவும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

'கபாலி' பொன்னம்பலத்துக்கு ஸ்லோ பாய்சன், குழிதோண்டி செய்வினை செய்த அண்ணன்..! பரபரப்பு பேட்டி.. வீடியோ

actor Ponnambalam Interview reveals his brother betrayal

People looking for online information on Ponnambalam, Ponnambalam interview will find this news story useful.