எளிமையான திருமணம், மாலத்தீவில் Honeymoon, ஆல்யா மானசா-சஞ்சீவ் வரவேற்பு வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 18, 2019 09:01 AM
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியான ஆல்யா மானசா, சஞ்சீவ் கார்த்திக் ஜோடிக்கு சமீபத்தில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலில் செம்பா-கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கணவன், மனைவியாக நடித்து மிகவும் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இந்த சீரியலில் நடிக்கும் போது காதலில் விழுந்த இவர்கள் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில், இருவரும் மோதிரம் மாற்றி மாலை அணிவித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசாவிற்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் பரவிய நிலையில், சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு எளிமையான முறையில் 2 மாதங்களுக்கு முன்பே திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக அறிவித்தார்.
அதையடுத்து, அவரது ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை புதுமண தம்பதிகளுக்கு தெரிவித்தனர். தற்போது சென்னையில், Feathers ஹோட்டலில் ஆல்யா மானசா-சஞ்சீவ் தம்பதிக்கு நண்பர்களும், உறவினர்களும், திரையுலக நட்சத்திரங்களும் பங்கேற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
எளிமையான திருமணம், மாலத்தீவில் HONEYMOON, ஆல்யா மானசா-சஞ்சீவ் வரவேற்பு வீடியோ வீடியோ