இரட்டை குழந்தைகளுக்கு தாயான டிவி சீரியல் நடிகை சந்தோஷி!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 09, 2019 10:46 AM
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பிரபலமடைந்த நடிகை சந்தோஷிக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது.

நாடக நடிகை பூர்ணிமாவுக்கு மகளாக பிறந்தவர் நடிகை சந்தோஷி. 8 வயதாக இருக்கும் போதே அம்மாவுடன் இணைந்து நாடகங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு ரஜினிகாந்த் மற்றும் மனீஷா கொய்ராலா ஆகியோரது நடிப்பில் வந்த பாபா என்ற படத்தில் சாமுண்டீஸ்வரியாக வரும் மனீஷா கொய்ராலாவுக்கு சகோதரியாக நடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து பாலா, மாறன், ஆசை ஆசையாய், அன்பே அன்பே, உன்னை சரணடைந்தேன், யுகா, நினைத்தாலே, வீராப்பு, மரியாதை, பொற்காலம் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
வெள்ளித்திரையை தவிர்த்து சின்னத்திரையிலும் அதிகளவில் பிரபலமாகியுள்ளார். வாழ்க்கை, ருத்ர வீணை, அம்மு, அரசி, இளவரசி, சூரிய புதிரி, வாடகை வீடு, இல்லத்தரசி, மரகத வீணை, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், பாவ மன்னிப்பு, பொண்டாட்டி தேவை, நம்பர் 23 மகாலட்சுமி நிவசம் என்று பல தொடர்களில் நடித்துள்ளார்
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடன் நடிக்கும் நாடக நடிகர் ஸ்ரீகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், தற்போது இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.