பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் 17வது போட்டியாளர் இவரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 16, 2019 02:02 AM
பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் உள்ளே செல்லும் 17வது போட்டியாளர் குறித்த தகவலை நடிகை ஷாலு ஷாமு நம்மிடையே பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

‘வருத்தப்படாத வாலிபர் சிங்கம்', 'தெகிடி', 'ஈட்டி', ‘திருட்டுப்பயலே 2’ போன்ற படங்களில் நடித்தவர் ஷாலு ஷாமு. சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வைப்பு தருவதாக கூறி இயக்குநர் ஒருவர் தவறான முறையில் பேசியதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். இது சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், Personals வித் தாரா நிகழ்ச்சியில் பங்கேற்று பிரத்யேக பேட்டியளித்த நடிகை ஷாலு ஷாமு, பிக் பாஸ் சீசன் 3 குறித்தும், தனக்கு பரிட்சயமான மாடல்கள் மீரா மிதுன், அபிராமி ஆகியோர் குறித்தும் பகிர்ந்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போகும் 17வது போட்டியாளர் யார் என்பதையும் உறுதிப்பட கூறினார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 17வது போட்டியாளராக விஜய் டிவி பிரபலம் ஒருவர் செல்லவிருப்பதாக கூறினார். இது தொடர்பாக ஷாலு ஷாமு பேசுகையில், விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ‘ராஜா ராணி’ சீரியல் ஹீரோயினும், மாடலுமாகிய ஆல்யா மானசா பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அதிகபட்ச வாய்ப்பிருப்பதாக கூறினார். ஆல்யா மானசா நடித்து வண்டஹ் ராஜா ராணி சீரியலும் நிறைவடைந்ததை அடுத்து, அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என ஷாலு ஷாமு கூறியிருப்பது சாத்தியமாக அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
மேலும், பிக் பாஸ் சீசன் 3 தொடங்குவதற்கு முன்பாக, உள்ளே செல்லும் போட்டியாளர்கள் பட்டியலில் மீராவின் பெயர் இருந்ததை போல் என்னுடைய பெயரும் இருந்தது. ஆனால், அவர் கோர்ட், கேஸ் என சர்ச்சைகளில் இருந்ததால் அவரை பிக் பாஸ் குழுவினர் தேர்வு செய்திருக்கலாம் என ஷாலு ஷாமு தெரிவித்துள்ளார். மீரா மிதுனின் உண்மையான குணாதிசயம் குறித்தும் பல தகவல்களை ஷாலு ஷாமு பகிர்ந்துக் கொண்டார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் 17வது போட்டியாளர் இவரா? வீடியோ