இனிதே நடந்து முடிந்தது ‘ராஜா ராணி’ ஸ்டார் சஞ்சீவ்-ஆல்யா திருமணம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியான ஆல்யா மானசா, சஞ்சீவ் கார்த்திக் ஜோடி தங்களுக்கு திருமணம் நடந்து முடிந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Raja Rani stars Alya Manasa Sanjeev announces they are married

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு சமீபத்தில் நடந்த விழா ஒன்றில், இருவரும் மோதிரம் மாற்றி மாலை அணிவித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மிர்ச்சி செந்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆல்யா, சஞ்சீவ் தம்பதிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவர்களது திருமணம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது சஞ்சீவ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆல்யாவின் பிறந்தநாளன்றே தங்களுக்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டதாகவும், சில பிரச்சனைகளால் அறிவிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சஞ்சீவின் இந்த பதிவை தொடர்ந்து அவரது ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை புதுமண தம்பதிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.