'Alya Manasa பிக்பாஸின் 17 வது போட்டியாளரா?' - ராஜா ராணி இயக்குநர் பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 17, 2019 07:09 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் வேட்டையனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் கவின். இவர் 'நட்புனா என்னனு தெரியுமா?' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

தற்போது கவின் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் 'சரவணன் மீனாட்சி', 'ராஜா ராணி' தொடர்களின் இயக்குநர் பிரவீன் பென்னட் பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ''சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி கேரக்டருக்கு அபிராமியை நாங்கள் ஆடிசன் செய்திருந்தோம். அப்போதே அவர் கவினுக்கு மிகப் பெரிய ஃபேன் என்று தெரிவித்தார்.
மேலும், பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தவுடன் சீரியலில் புக் பண்ணிடுவோம். ஆனா அவங்க ஓகே சொல்லுவாங்களா இல்லையானு தெரியல. ஹீரோ கேரக்டருக்கு கவின் இல்லனா சாண்டிய போடலாம்னு இருக்கேன் என்றார்.
அப்போது ஆலயா மானசா பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொள்கிறார்களா என்ற கேள்விக்கு, அப்படியா போறாளா, என்னை கேட்காம எதுவும் செய்ய மாட்டாள். கலந்துகொள்ள வாய்ப்பு இல்ல'' என்று தெரிவித்தார்.
'ALYA MANASA பிக்பாஸின் 17 வது போட்டியாளரா?' - ராஜா ராணி இயக்குநர் பதில் வீடியோ