www.garudabazaar.com

பிரபல கிரிக்கெட் வீரர் மகள் தான் நடிகை ராதிகா பேத்தியா..! வைரலாகும் CUTE புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராதிகா சரத்குமார்  தமது பேத்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Radhika SarathKumar shared her grand daughter images

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சாப்ட்டீங்களானு கேட்ட ராதிகா.. "ஓ.. நல்லா ஊத்தி..".. ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்ச கோபி.! Baakiyalakshmi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த 1978 ஆம் ஆண்டு வெளிவந்த 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராதிகா சரத்குமார்.‌ சமீபத்தில் ரன் பேபி ரன் படத்தில் நடித்திருந்தார். தற்போது சந்திரமுகி 2 மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை தொடர்களிலும் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.

Radhika SarathKumar shared her grand daughter images

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் ராதிகா சரத்குமார் குடும்பத்துடன் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தில் நடிகர் சரத்குமார், வரலெட்சுமி சரத்குமார், கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றுப்பயணத்தில் குடும்ப உறுப்பினர்கள் நடனம் ஆடும் வீடியோவை வரலெட்சுமி சரத்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நடன வீடியோவை கிரிக்கெட் வீரரும், ராதிகா & சரத்குமாரின் மருமகனுமான அபிமன்யு மிதுன் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Radhika SarathKumar shared her grand daughter images

Images are subject to © copyright to their respective owners.

அபிமன்யு மிதுன், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக ஒருசில போட்டிகளில் மிதுன் விளையாடி உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு, ராதிகா & சரத்குமாரின் மகள் ராயனி ஹார்டியை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Radhika SarathKumar shared her grand daughter images

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தமது பேத்தி ராத்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வடிவில் வெளியிட்டு வாழ்த்தி உள்ளார். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

Also Read | MISSION IMPOSSIBLE படத்தின் ஏழாவது பாகம்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான ஃபைட் சீன் போஸ்டர்! மிரட்டுதே

 

தொடர்புடைய இணைப்புகள்

Radhika SarathKumar shared her grand daughter images

People looking for online information on Radhika Sarathkumar will find this news story useful.