இளையராஜாவுக்கு பிறகு பாரதிராஜாவை சந்தித்த ராதிகா - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 10, 2019 02:17 PM
பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா. அதனைத் தொடர்ந்து 'நிறம் மாறாத பூக்கள்', 'பசும்பொன்', 'கிழக்கு சீமையிலே' உள்ளிட்ட படங்களில் பாரதிராஜாவுடன் இணைந்து ராதிகா பணிபுரிந்துள்ளார்.

தற்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ராதிகா, சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக 'மிஸ்டர்.லோக்கல்' படத்தில் நடித்திருந்தார். தற்போது பாரதி ராஜாவின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் மருதா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி அருகே நடைபெறுகிறது.
இந்நிலையில் திருமணம் ஒன்றிற்காக தேனி வந்திருந்தார் பாரதிராஜா. இதனை அறிந்த ராதிகா, பாரதிராஜாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். மேலும் பாரதிராஜாவுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்டார். சமீபத்தில் நீண்ட இடைவேளைக்கு இளையாராஜா - பாரதிராஜாவின் சந்திப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.