www.garudabazaar.com

Kannai Nambathey : “அதே மாதிரி ஒரு கதைய கேட்டேன்..”.. ‘கண்ணை நம்பாதே’ படம் குறித்து உதயநிதி ஸ்டாலின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கக்கூடிய கதைகள் வித்தியாசமானதாகவும் பார்வையாளர்களை படத்தில் ஒன்றக்கூடிய வகையிலும் அமைந்து வந்திருக்கிறது. அந்த வகையில், மார்ச் 17, 2023 அன்று உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கக்கூடிய ‘கண்ணை நம்பாதே’ படத்தின் எதிர்ப்பார்ப்பும் அதிக அளவில் இருக்கிறது.

Udhayanidhi Stalin shares his experience Kannai Nambathey

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Iniya : ‘தாலி கட்டுறப்போ போடும் 3 முடிச்சுக்கு அர்த்தம்’.. புதுப்பொண்ணு ‘இனியா’ சொன்ன விளக்கம்..!

இந்தப் படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து உதயநிதி பகிர்ந்திருப்பதாவது:-  ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் உருவான விதம் என்பது ரொம்பவே ஸ்பெஷல் மற்றும் சவாலான ஒன்று. எதிர்பாராத பல சவால்களுக்கு மத்தியில் இதை படமாக்கியுள்ளோம். அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தைப் பார்த்தப் பிறகு மு. மாறன் இயக்கத்தில் நடிக்கலாம் என்று அவரை சந்தித்தேன். முதலில் அவர் என்னிடம் ஒரு எமோஷனலான லவ் ஸ்டோரியை சொன்னார். வெவ்வேறு ஜானர்களில் படம் முயற்சிக்க விரும்பியதையும் கூறினார். ஆனால், அவருடைய முதல் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதைப் போன்றே ஒரு க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லருடன் நிமிடத்திற்கு நிமிடம் ஆச்சரியமும் ட்விட்ஸ்ட்டும் இருக்கும்படியான கதையை உருவாக்க அவருக்கு வேண்டுகோள் வைத்தேன். அதன் பிறகு ‘கண்ணை நம்பாதே’ படத்தின் கதையை சொன்னதும் எனக்குப் பிடித்திருந்தது. உடனே படப்பிடிப்பிற்கு கிளம்பினோம்.

Udhayanidhi Stalin shares his experience Kannai Nambathey

Images are subject to © copyright to their respective owners.

ஆனால், கொரோனா, என்னுடைய அரசியல் பயணம் ஆகிய காரணங்களால் இந்தப் படத்தின் பணிகளில் தாமதமானது. மு.மாறனுக்கும் ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மிகவும் பொறுமையாகவும் தேவையான ஆதரவையும் கொடுத்தார்கள். எல்லாருமே இதில் கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். இந்தப் படத்தின் பெரும்பகுதி இரவு நேரத்தில் சாலை ஓரங்களில் படமாக்கப்பட்டது.

இத்தனை கஷ்டங்களைத் தாண்டி இந்தப் படம் உலகம் முழுவதும் மார்ச் 17 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம். தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தின் தூண். மிஸ்ட்ரி த்ரில்லர் கதைக்குத் தேவையான விஷயங்களை இதில் கொடுத்துள்ளனர். ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைக்கும்படியான எதிர்பாராத ட்விஸ்ட் மற்றும் ஆச்சரியங்களுடன் இருக்கும்” என்றார்.

Udhayanidhi Stalin shares his experience Kannai Nambathey

Images are subject to © copyright to their respective owners.

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், ஆத்மிகா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ கருப்பையா, சென்ட்ராயன், மற்றும் கு. ஞானசம்பந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்: LIPI Cine Crafts சார்பில் விஎன் ரஞ்சித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை மு. மாறன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை மார்ச் 17, 2023 அன்று வெளியிடுகிறது.

இசை: சித்து குமார்,

ஒளிப்பதிவு: ஜலந்தர் வாசன்,

படத்தொகுப்பு: சான் லோகேஷ்,

கலை: என்.கே. ராகுல் பி.எஃப்.ஏ,

நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: பிரபாகரன், வினோத் குமார் சி,

தயாரிப்புக் கட்டுப்பாடு: சுந்தரம் & கார்த்திக்,

சண்டைப்பயிற்சி: ஆர். சக்தி சரவணன்,

ஆடை வடிவமைப்பாளர்: ஆர். திலகப்ரியா சண்முகம்,

ஒப்பனை: முனியராஜ்,

படங்கள்: ராமசுப்பு,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன்

Also Read | Custody : வெங்கட் பிரபு - சைதன்யா கூட்டணியில் உருவாகும் கஸ்டடி.. வெளியான அடுத்த அப்டேட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi Stalin shares his experience Kannai Nambathey

People looking for online information on Kannai Nambathey, Udhayanidhi Stalin will find this news story useful.