ET Others
www.garudabazaar.com

நடிகை ராதிகாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா… அப்படி என்ன விஷேசம் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராதிகா சூர்யா மற்றும் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Actor surya gave a surprise to Radhika sarathkumar

திரையுலகில் ராதிகா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிஸியான நடிகையாக இருக்கிறார். 1978 ஆம் ஆண்டு அவர் பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலமாக அறிமுகமானார். அதில் இருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

குணச்சித்திர வேடங்கள்:

ஒரு கட்டத்தில் சினிமாவில் குணச்சித்திர வேடங்கள் ஏற்று அதிலும் தனது தனித்துவமான நடிப்பால் பிஸியான நடிகையாக வலம் வந்தார். சினிமா போலவே சின்னத்திரையிலும் கால்பதித்து சித்தி போன்ற மெஹா ஹிட்டான தொடர்களில் நடித்து சின்னத்திரை உலகின் முன்னணி நடிகையானார். ஒரு பக்கம் சினிமா ஒரு பக்கம் சீரியல் என கலக்கி கொண்டு வரும் அவருக்கு சமிபத்தில் தர்மதுரை மற்றும் நானும் ரௌடிதான் போன்ற படங்கள் பாராட்டைப் பெற்றுத்தந்த படங்களாக அமைந்தன.

Actor surya gave a surprise to Radhika sarathkumar

சூர்யாவோடு எதற்கும் துணிந்தவனில்:

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படமாக 'எதற்கும் துணிந்தவன்' உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி பகுதியில் நடைபெற்று நடைபெற்று முடிந்துள்ளது. 5 மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. இந்த படத்தில் சூர்யாவோடு பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி மற்றும் புகழ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஒரு  முக்கியமானக் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.

Actor surya gave a surprise to Radhika sarathkumar

சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ்:

இந்நிலையில் இப்போது ராதிகா சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படத்தில் ராதிகாவோடு சூர்யா மற்றும் புகைப்படக் கலைஞர் வெங்கட்ராம் உள்ளிட்ட சினிமா கலைஞர்கள் இருக்கின்றனர். அந்த புகைப்படத்தோடு ’ நன்றாக கழிக்கப்பட்ட ஒரு ஞாயிறு. ஒரு வாரம் முழுவதற்குமான நாள். #நண்பர்கள் #இன்ப அதிர்ச்சி #பிறந்தநாள்’ எனக் கூறியுள்ளார். ராதிகாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவரின் நண்பர்கள் எல்லோரும் சர்ப்ரைஸாக வந்து வாழ்த்தியுள்ளதை புகைப்படத்தோடு பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor surya gave a surprise to Radhika sarathkumar

People looking for online information on Etharkum Thuninthavan, Radhika, Surya will find this news story useful.