www.garudabazaar.com

சாப்ட்டீங்களானு கேட்ட ராதிகா.. "ஓ.. நல்லா ஊத்தி..".. ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்ச கோபி.! Baakiyalakshmi

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு பக்கம், கோபி மற்றும் ராதிகா ஆகியோரிடையே நடைபெறும் நிகழ்வுகளும், மறுபக்கம் பாக்கியா தனது குடும்ப நிலையை உயர்த்த கடினமாக உழைக்க முயற்சிப்பது குறித்தும் பாக்கியலட்சுமி தொடர் நகர்ந்து கொண்டிருக்கிறது.

Gopi Caught to Radhika late night Baakiyalakshmi new promo

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Custody : வெங்கட் பிரபு - சைதன்யா கூட்டணியில் உருவாகும் கஸ்டடி.. வெளியான அடுத்த அப்டேட்..!

இதனிடையே பிரபல 90ஸ் புகழ் நடிகர் ரஞ்சித்தும் பாக்கியலட்சுமி தொடரில் பழனிசாமி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்கி உள்ளார்.

இந்த நிலையில், கோபியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சதீஷ், அண்மையில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அதே பெயராகவே ரசிகர்கள் மத்தியில் மாறி போனவர் நடிகர் சதீஷ். காமெடியாக, பதற்றம் நிறைந்து என அனைத்து ஏரியாவிலும் சிறப்பாக நடித்து சிக்ஸர் அடிக்கும் சதீஷ், அண்மையில் தான் தொடர்ந்து பாக்கியலட்சுமியில் நடிப்பதை வீடியோ மூலம் உறுதிப்படுத்தினார்.

Gopi Caught to Radhika late night Baakiyalakshmi new promo

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே ராதிகாவின் தொடர் தடுப்பு முயற்சிக்கு பிறகு பாக்கியலட்சுமி, ராதிகாவின் அலுவலகத்தில் சமையல் காண்ட்ராக்டை அந்த மேனேஜர் மூலம் வாங்கி விட்டார். எனினும் பாக்கியலட்சுமியின் ஆங்கிலத் திறமையை ராதிகா கிண்டலடித்து தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியதால் பாக்கியலட்சுமி அவரை எதிர்கொள்ளும் வலிமையை சம்பாதிக்கும் வகையில் இங்கிலீஷ் வகுப்புக்கு செல்ல தொடங்கினார். அந்த வகுப்பில்தான் நடிகர் ரஞ்சித் இணைந்துள்ளார்.

Gopi Caught to Radhika late night Baakiyalakshmi new promo

Images are subject to © copyright to their respective owners.

பழனிசாமி என்கிற கேரக்டரில் ரஞ்சித் தனக்கே உரிய கலகலப்பான கொங்கு பாஷையில் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறார். இதனிடையே பாக்கியலட்சுமியின் சமையல் காண்ட்ராக்ட் திறப்பு விழாவுக்கு ரஞ்சித் மற்றும் பாக்கியலட்சுமியுடன் ஆங்கில வகுப்பில் பயிலும் நண்பர்கள் வந்து போக, இதுகுறித்து பாக்கியலட்சுமியின் மாமியாருக்கும் தெரிந்து விட்டது. எப்படியோ அவரையும் ஒரு வழியாக பாக்கியலட்சுமி சமாதானப்படுத்தி விட்டார்.

Gopi Caught to Radhika late night Baakiyalakshmi new promo

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி - ராதிகா இடையிலான போர் அதிகரித்து இருக்கிறது. ஒரு பக்கம் இப்படி இருக்க இன்னொரு பக்கம் கோபி குடித்துவிட்டு வீட்டுக்கு வர தொடங்கி இருக்கிறார். அதற்கு காரணம் வீட்டு வாடகை, குழந்தைகளின் படிப்பு செலவு உள்ளிட்ட செலவுகளுக்கான பண நெருக்கடிகள்தான். அதேசமயம் ராதிகாவோ கோபியை பல சமயங்களில் கேள்விகளாலும் கோபத்தாலும் எதிர்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட பாக்கியலட்சுமியின் சமையல் காண்ட்ராக்ட் திறப்பு விழாவுக்கு இனியாவை அழைக்க சென்ற கோபியை அந்த விழாவில் கலந்துகொள்ள சென்றதாக தவறாக நினைத்து ராதிகா கோபத்தில் கோபியை கேள்விக் கணைகளால் துளைத்தார்.

Gopi Caught to Radhika late night Baakiyalakshmi new promo

Images are subject to © copyright to their respective owners.

இதில்தான் தற்போது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கோபியிடம் ராதிகா, ‘சாப்பிட்டீங்களா’ என கேட்க,  முதலில், ‘ஆங்.. நல்லா ஊற்றி’ என்று தான் மது குடித்ததை பற்றி கூற வந்த கோபி அப்படியே மாற்றி, ‘ஓ.. சாப்பிட்டேன்’ என்று பதில் அளித்து தப்பித்துவிட்டார். இப்படித்தான் பல காமெடி ரியாக்ஷன்களால் இந்த சீரியலில் கோபி ஸ்கோர் பண்ணுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் சிறுவண்டு சிக்காது என்று கமெண்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read | Kannai Nambathey : “அதே மாதிரி ஒரு கதைய கேட்டேன்..”.. ‘கண்ணை நம்பாதே’ படம் குறித்து உதயநிதி ஸ்டாலின்!

Gopi Caught to Radhika late night Baakiyalakshmi new promo

People looking for online information on Baakiyalakshmi Radhika, Baakiyalakshmi serial today, Baakiyalakshmi serial update, Gopi Comedy will find this news story useful.