‘கோடீஸ்வரி’ பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் டிவி-யில் களமிறங்கும் ராதிகா சரத்குமார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவை கடந்து டிவி சீரியல்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள நடிகை ராதிகா சரத்குமார் முதன் முறையாக டிவி தொகுப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

Radhika Sarathkumar to host Kodeeswari TV show in colors Tamil TV

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘கோடீஸ்வரி’ என்ற வினாடி-வினா கேம் ஷோவை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கவுள்ளார். பெண்கள் மட்டுமே பங்கேற்கவுள்ள இந்த பிரத்யேக நிகழ்ச்சியில் அவர்களின் அறிவுக்கூர்மை, விழிப்புணர்வு ஆகியவற்றை உலகிற்கு அடையாளம் காட்டும் விதமாக உருவாகவுள்ளது.

ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2000ம் ஆண்டு சன் டிவியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ‘கோடீஸ்வரன்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனம் மற்றும் சன் டிவியும் இணைந்து தயாரித்த இந்நிகழ்ச்சியை நடிகர் சரத்குமார் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, நடிகை ராதிகா சரத்குமார், டிவி சீரியல்களில் மிகவும் பிரபலமான ‘சித்தி’ சீரியலின் இரண்டாம் பாகத்தையும் தயாரித்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.