சர்வதேச அளவில் இந்த டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முதல் பெண் - நடிகை ராதிகா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவை கடந்து டிவி சீரியல்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள நடிகை ராதிகா சரத்குமார் முதன் முறையாக டிவி தொகுப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

Radhika Sarathkumar will be the First Woman to host KBC Kodeeswari for Women

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘கோடீஸ்வரி’ என்ற வினாடி-வினா கேம் ஷோவை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார். பெண்கள் மட்டுமே பங்கேற்கவுள்ள இந்த பிரத்யேக நிகழ்ச்சியில் அவர்களின் அறிவுக்கூர்மை, விழிப்புணர்வு ஆகியவற்றை உலகிற்கு அடையாளம் காட்டும் விதமாக உருவாகிறது.

ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி வெற்றியடைய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிகை ராதிகா சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “கலர்ஸ் கோடீஸ்வரி நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடையவும், தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் KBC (Kaun Banega Crorepati) நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முதல் பெண் நடிகை ராதிகா. அதேபோல், முதன் முறையாக பெண்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.