www.garudabazaar.com

"காமெடி லெஜெண்ட்".. நடிகர் விவேக்கின் காமெடி வீடியோ.. இசைப்புயலின் உருக்கமான பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகர் விவேக்கின் பழைய காமெடி வீடியோவை ரீட்வீட் செய்து, விவேக்கை மிஸ் செய்வதாக இசைப்புயல் AR ரஹ்மான் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களுக்கு மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

AR Rahman Retweet Late Actor Vivek old Comedy Video

Images are subject to © copyright to their respective owners.

Also Read | DASARA: "என்ன ஆனாலும் பாத்துக்கலாம்".. நானியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான டிரெய்லர்!

விவேக்

தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என பலராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். 1987 ஆம் ஆண்டு வெளியான மனதில் உறுதி வேண்டும் படத்தில் விவேக் அறிமுகமானார். கே.பாலச்சந்தர் இந்த படத்தினை இயக்கி இருந்தார். இது துவங்கி பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து கோடிக்கணக்கான மக்களை கவர்ந்திழுத்தவர் விவேக். சினிமா துறையில் இவருடைய பங்களிப்பை பாராட்டி இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவப்படுத்தியது. கடந்த 2021 ஆம் ஆண்டு விவேக் மரணமடைந்தார். அவர் மறைந்தாலும் இன்றைய தேதிவரையில் சோசியல் மீடியாவில் அவருடைய வசனங்கள் தினந்தோறும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

AR Rahman Retweet Late Actor Vivek old Comedy Video

Images are subject to © copyright to their respective owners.

விஸ்வநாதன் ராமமூர்த்தி

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் விஸ்வநாதன் ராமமூர்த்தி. ராம நாராயணன் இயக்கிய இந்த படத்தில் ராம்கி, விவேக், ரோஜா, விந்தியா, கோவை சரளா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். முழுநீள காமெடி திரைப்படமாக வெளிவந்த இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இயக்குநராக முயற்சிக்கும் நபருடைய கதாப்பாத்திரத்தில் விவேக் நடித்திருந்தார்.

போஸ்ட்

இந்நிலையில், இந்த படத்தில் விவேக் நடிகர் விஜயகாந்தை சந்திக்கும் காட்சியை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தமிழ் மொழியின் அவசியம் பற்றி விஜயகாந்த் பேசும் வசனங்கள் இன்றளவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பவை. இந்நிலையில் இந்த வீடியோவை AR ரஹ்மான் ரீட்வீட் செய்திருக்கிறார்.

AR Rahman Retweet Late Actor Vivek old Comedy Video

Images are subject to © copyright to their respective owners.

மேலும் அவர் எழுதியுள்ள பதிவில் காமெடி லெஜெண்ட் விவேக்கை மிஸ் செய்வதாகவும், அவருடைய மறைவு மிகப்பெரிய இழப்பு எனவும் AR ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | "வெறுப்பு உங்களைத்தான் அதிகம் காயப்படுத்தும்".. இயக்குநர் செல்வராகவன் அட்வைஸ் பதிவு..!

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman Retweet Late Actor Vivek old Comedy Video

People looking for online information on AR Rahman, AR Rahman Retweet Late Actor Vivek, Vivek will find this news story useful.