www.garudabazaar.com

போடு சக்க.. குக் வித் கோமாளி 3-ல் புகழ்!.. கெத்து எண்ட்ரி.. ஆனா வந்தவுடனே வாங்கிய உதை.. தெறி ப்ரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 02 பிப்ரவரி 2022:- விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சி Cook With Comali. மக்களின் ரசனையை பூர்த்தி செய்யக்கூடிய இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது தொடங்கி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

Pugazh Participates Cook With Comali 3 Vijay TV Promo

புகழ் வருகை

இந்த நிகழ்ச்சியின் புகழ்பெற்றவர் புகழ். இவர் தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு திடீரென வருகை தந்திருக்கிறார். இதுதொடர்பான புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு புகழ் மீண்டும் எப்போது வருவார் என்று அனைவருமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் புகழ் வரும் 5 மற்றும் 6-ஆம் தேதி எபிசோடுகளில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தெரிகிறது.

Pugazh Participates Cook With Comali 3 Vijay TV Promo

Also Read: நடிகர் விமல்.. சைலண்ட்டா ஒரு சம்பவத்த பண்ணிருக்காரே!.. ரிலீஸ் தேதியுடன் வெளியான போஸ்டர்!

வந்தவுடனே வாங்கிய உதை!

இது தொடர்பான ப்ரோமோவில் புகழ் கெத்தாக என்ட்ரி கொடுக்கிறார். வந்தவரை   மற்ற அனைவரும் கை தட்டியும் ஆரவாரம் செய்தும் விசில் அடித்தும் வரவேற்கின்றனர். அத்துடன் எப்போதும் போல புகழ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்  பந்தம் கலகலப்பாக தொடங்கியது. ஆம், வந்தவரை வெங்கடேஷ் பட், ஒரு உதை உதைக்க புகழ் தாமோதரனை கட்டிக்கொண்டு அப்பா என்று அழுகிறார். அப்போது பின்னணியில் நடிக்காதடா டேய் என்று ஒலிச்சித்திரம் கேட்கிறது.

Pugazh Participates Cook With Comali 3 Vijay TV Promo

புகழ் இந்த நிகழ்ச்சியில் இருந்தவரை, செஃப் தாமோதரனை அப்பாங் என்று அழைப்பார். இதேபோல் வெங்கடேஷ் பட், புகழை துரத்தி துரத்தி அடிப்பார். இதெல்லாம் கலகலப்பான ஜாலியான நிகழ்வாகவே இருக்கும். ஒரு வழியாக இந்த சீசனில் புகழை மிஸ் பண்ணிக் கொண்டிருந்த அனைவருக்கும், புகழ் திடீரென அந்த நிகழ்ச்சியில் வருகை தந்திருப்பது என்பது ஆறுதலாக இருக்கிறது.

எவ்வளவு நாள் இருக்கப் போகிறார்?

எனினும் புகழ் இந்த நிகழ்ச்சியில் எவ்வளவு நாள் இருக்கப் போகிறார்? சிறப்பு விருந்தினராக 2 நாட்கள் மட்டும் வந்திருக்கிறாரா? என்பது குறித்த தகவல்கள் கேள்விகள் ஏற்கனவே ரசிகர்களிடத்தில் இருந்தன. அப்போது புகழ் இந்த நிகழ்ச்சியில் முழுமையாக இருக்க முடியாவிட்டாலும், அவ்வப்போது வருகை தந்து தன்னுடைய பங்களிப்பை கொடுப்பார் என்று கூறப்பட்டிருந்தது.

திரைப்படங்களில் புகழ்Pugazh Participates Cook With Comali 3 Vijay TV Promo

அண்மையில் நடிகர் சந்தானம் நடித்த சபாபதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் புகழ். இதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முந்தைய சீசனில் பிரபலமான போட்டியாளரான அஸ்வின் நடித்து, சமீபத்தில் வெளியான என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தில் புகழ் முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களில் புகழ் பிஸியாக  நடித்து வருகிறார்.

Also Read: கைகோர்க்கும் அமீர் & வெற்றிமாறன்!.. போஸ்டர்ல இருக்குற அந்த 3வது நபர் யாரு?!

தொடர்புடைய இணைப்புகள்

Pugazh Participates Cook With Comali 3 Vijay TV Promo

People looking for online information on Cook with comali 3, Cook With Comali Season 3, Pugazh, Vijay tv will find this news story useful.