www.garudabazaar.com

கண்ணம்மாவா தானே பாத்துருக்கீங்க.. CONTESTANT-ஆ இல்லயே?.. குக் வித் கோமாளி 3-ல் ரோஷினி தெறி எண்ட்ரி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்தவர் ரோஷினி ஹரிப்பிரியன். பட்டிதொட்டியெங்கும் இவரை கண்ணம்மாவாகவே மக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

Bharathi Kannamma fame Roshini Haripiriyan in cook with comali 3

ஆனால் அண்மையில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி ஹரிப்பிரியன் அறிவித்து, இது தொடர்பான ஒரு வீடியோ பதிவையும் அவர் பகிர்ந்தார். அதில், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாகவும், அனைவரும் மன்னித்து விடுங்கள் என்றும் குறிப்பிட்ட ரோஷினி ஹரிபிரியன் அந்த முடிவு பலருக்கும் ஏமாற்றம் தரலாம், ஆனால் விரைவில் வேறொரு பரிமாணத்தில் ரசிகர்களை சந்திப்பதாகவும் கூறினார்.

Bharathi Kannamma fame Roshini Haripiriyan in cook with comali 3

இதனை அடுத்து பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய கண்ணம்மாவாக நடிக்கத் தொடங்கிய வினுஷாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே ரோஷினி ஹரிபிரியன் அடுத்ததாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். விஜய் டிவியில் ஏகோபித்த ரசிகர்களைக் கொண்ட மிக பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி.

Bharathi Kannamma fame Roshini Haripiriyan in cook with comali 3

இந்த நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் முதலாவது சீசனில் வனிதா விஜயகுமாரும், 2வது சீசனில் கனியும் வெற்றி பெற்றனர். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினர். இதனை அடுத்து இந்நிகழ்ச்சியின் 3வது சீசனின் ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

Barathi Kannamma: சயின்ஸா? சாமியா?.. பொங்கலில் ‘நீதி காத்த அம்மன்’ வெச்ச ட்விஸ்ட்! குழம்பிய பாரதி!

 

Bharathi Kannamma fame Roshini Haripiriyan in cook with comali 3

இந்நிலையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசனில் ரோஷினி ஹரிப்பிரியன் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவருடன் கோமாளியாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான குரேஷி பங்குபெறுவதாக ப்ரோமோ மூலம் தெரியவருகிறது.

Bharathi Kannamma fame Roshini Haripiriyan in cook with comali 3

அப்போது, “ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து, இதுவரைக்கும் மக்கள் உங்களை கண்ணம்மாவாக பார்த்தார்கள். ஆனால் இனி ரோஷினி ஹரிப்பிரியனாக பார்ப்பார்கள்.” என்று நடிகர் மற்றும் விஜே ரக்‌ஷன் ரோஷினி ஹரிபிரியனை வரவேற்று பேசினார்.

நீங்கலாம் மைக்கேல் ஜாக்சன் குடும்பம்.. ஃபினாலேவில் அமீரை குறிப்பிட்டு கமல்ஹாசன் பேச்சு!

 

Bharathi Kannamma fame Roshini Haripiriyan in cook with comali 3

மேலும், தனக்கு பிடித்தவர்களுக்கு சமைத்துக் கொடுப்பது தனக்கு மிகவும் ரொம்பப் பிடித்த ஒரு விஷயம் என்று ரோஷினி ஹரிப்பிரியன் அந்த ப்ரோமோவில் கூறியுள்ளார்.

Bharathi Kannamma fame Roshini Haripiriyan in cook with comali 3

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Kannamma fame Roshini Haripiriyan in cook with comali 3

People looking for online information on குக் வித் கோமாளி 3, பாரதி கண்ணம்மா சீரியல், ரோஷினி ஹரிப்பிரியன், Bharathi Kannamma, Cook with comali 3, Roshini Haripiriyan will find this news story useful.