www.garudabazaar.com

திருமணமாகி 100-வது நாள்.. "37 வருசத்துல".. மனைவி மகாலட்சுமி பற்றி நெகிழ்ந்த ரவீந்தர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் ரவீந்தர் தனது திருமணத்தின் 100வது நாள் குறித்து  பதிவிட்டுள்ளார்.

Producer Ravindar Instagram Post about His Wife Mahalakshmi

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்.. லால் சலாம் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோர் சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடிக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 90 ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார்.

தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். ரவீந்தர் சந்திரசேகரன், கூர்கா, சஙகத்தமிழன் ஆகிய படங்களை வினியோகம் செய்துள்ளார்.

ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் குறித்து Behindwoods-ல் தனது பார்வையை முன் வைக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் ரவீந்திர் வழங்கி வருகிறார். மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், இந்த பெயர் மூலம் மக்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானவர்.

திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ரவீந்தர். இந்நிலையில் தனது திருமணத்தின் 100வது நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "100 நாட்கள் முடிந்தது.. ஆம்!! அம்மு இந்த 100 நாள் பதிவுக்கு நல்லதொரு தலைப்பை எழுத என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன்.. என்னால் நாடகமாக எழுத முடியவில்லை.. நான் நினைப்பதை எழுதுவேன்..

அம்மு..37 வருடங்களுக்குப் பிறகு.. ஒவ்வொரு நொடியிலும் 100 நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன்.. அதே அதிக அன்பு, அக்கறை, வேடிக்கை, சண்டை என என்னை நகர்த்திக்கொண்டே இரு. வாழ்றேன் அம்மு சந்தோசமா உன்னால்!!!!" என ரவீந்தர் பதிவிட்டுள்ளார்.

 

Also Read | பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ரஜினி.. வெளியான ஜெயிலர் படத்தின் GLIMPSE வீடியோ!

 

தொடர்புடைய இணைப்புகள்

Producer Ravindar Instagram Post about His Wife Mahalakshmi

People looking for online information on Mahalakshmi, Ravindar Chandrasekaran, Ravindar Instagram Post will find this news story useful.