www.garudabazaar.com

அப்பாவாகும் நடிகர் ராம் சரண்.. தாத்தா ஆகப்போகும் மகிழ்ச்சியில் சிரஞ்சீவி வெளியிட்ட அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR புகழ் நடிகர் ராம் சரண் & அவரது மனைவி உபசன்னா தங்களது முதல் குழந்தையை எதிர் நோக்கி உள்ளனர்.

Ram Charan Upasana are expecting their first child

Also Read | சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய ஜெயிலர் படக்குழு.. அதுவும் ரம்யா கிருஷ்ணன் வாழ்த்து தான் ஹைலைட் 😍

RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. நடிகர் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது. இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார்.

RRR படம் 1100 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூலாக ஈட்டியது.

Ram Charan Upasana are expecting their first child

சமீபத்தில் ராம் சரண் தனது மனைவி உபசன்னாவுடன் ஆப்ரிக்காவில் சுற்றுலா சென்றார். தான்சானியா நாட்டில் உள்ள காடுகளில் சவாரி செல்லும் வீடியோ & புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

Ram Charan Upasana are expecting their first child

தற்போது ராம் சரண், ஷங்கர் இயக்கத்தில் RC15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராம் சரண் & உபசன்னா தங்களது முதல் குழந்தையை எதிர் நோக்கி உள்ளனர் என நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் &  அணில் காமினேனி குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளனர். "அனுமனின் ஆசியோடு உபசன்னா & ராம் சரண் தங்களது முதல் குழந்தையை எதிர் நோக்கி உள்ளனர்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Ram Charan Upasana are expecting their first child

2012-ல் ராம் சரண் & உபசன்னா திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உபசன்னா, அப்போலோ மருத்துவமனை சேர்மன் பிரதாப் ரெட்டியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | ரஜினி பிறந்தநாளில் A.R. ரஹ்மான் வெளியிட்ட UNSEEN வீடியோ.. மனுசன் ஆச்சர்யத்தில் மூழ்கிட்டாரு!

தொடர்புடைய இணைப்புகள்

Ram Charan Upasana are expecting their first child

People looking for online information on Chiranjeevi, Ram Charan, Ram Charan Upasana, Upasana Kamineni will find this news story useful.