"ஒவ்வொரு நாளும் தீபாவளிதான்".. தல தீபாவளி கொண்டாடும் ரவீந்தர் & மகாலட்சுமி தம்பதி 😍
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.
குறிப்பாக Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், FATMAN என்கிற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுவர். கடைசியாக ரவீந்தர் தயாரிப்பில் சாந்தனு பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்நிலையில்தான், தயாரிப்பாளர் ரவீந்தருக்கு பிரபல விஜே மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. 2000த்துக்கு பின் 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக பரிச்சயமானவர் விஜே மகாலட்சுமி. அதன்பிறகு, சின்னத்திரை நடிகையாக வலம் வந்தார். இவருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும்தான் திருப்பதி கோயிலில் 2022, செப்டம்பர் 1-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருப்பதியில் இவர்களின் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர். ஏராளமானோர் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். இதனிடையே 2022, அக்டோபர் 1-ஆம் தேதி தங்களின் 1 மாத திருமண நிறைவை ரவீந்தர் - மகலாட்சுமி தம்பதி கொண்டாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்.
முன்னதாக பிஹைண்ட்வுட்ஸ் பிரத்தியேக நேர்காணலில், தம் கணவர் ரவீந்தர் பற்றி பேசிய மகாலட்சுமி, “எனக்கு அவர் இப்படி இருப்பது பிரச்சனையாக தோன்றவில்லை. எனக்கே ஏதும் தோன்றாத போது, நீங்கள் ஏன் அதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் நான் அவரிடம் கேட்பேன். அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே எனக்கு பிடிக்கும். அவ்வளவு தான். உடம்பை குறைப்பதற்கான முயற்சிகள் பற்றி என்னிடம் சொல்வார். நான் அப்படி எதையும் செய்து விட வேண்டாம் என்று தான் கூறுவேன். உடல் ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும்” என்று கூறியிருந்தார்.
மேலும் பேசியவர், “இந்த விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை பார்க்கும் போது, ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற விஷயம் தான் அதிகமாகிறது” என்றும், “அதற்காக அவர்களுக்கு நன்றிகள்” என்றும் மகாலட்சுமி கூறி இருந்தார். இந்நிலையில் இந்த தம்பதியினர் அக்டோபர் 24-ஆம் தேதியான இந்த தீபாவளி திருநாளில், தங்களது தல தீபாவளியை கொண்டாடிவருகின்றனர். இது தொடர்பாக தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் ரவீந்தர், “என்ன நேசிக்கிற ஒருத்தி என்ன சுத்தி சுத்தி வர ஒவ்வொரு நாளும் எனக்கு தீபாவளிதான். ஆனா இன்னைக்கு எனக்கு தல தீபாவளி. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துகள். சந்தோஷமா இருங்க..சந்தோஷமா இருப்போம்!” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 2K Couples Mahalakshmi Ravindar Viral Post மகாலட்சுமி ரவீந்தர்
- VJ Mahalakshmi Opens Up Ravindar Mahalakshmi Exclusive Interview
- Producer Ravindar Serial Actress Vj Mahalakshmi Marriage
- Producer Ravindar Chandrasekaran Aka Fat Man To Make His Directorial Debut With Markendayanum Magalir Kallooriyum
- Ravindar Chandrasekaran To Release Raaghavn Ranganathan’s Ticket
- Ravindar Chandrasekaran Announces That Kolai Nokku Paarvai Is Dropped
தொடர்புடைய இணைப்புகள்
- எங்கே போனாலும் ஒன்னா தான் போவோம்... BIGG BOSS உள்ளே Entry கொடுக்கும் RAVINDAR& VJ MAHALAKSHMI ஜோடி?
- 'காதல் மனைவியுடன் பறந்த ரவீந்தர்'.. எங்க போறாங்க தெரியுமா? அவரே சொன்ன பகிர் விளக்கம்
- 🔴LIVE: VJ Mahalakshmi, Fatman Ravindhar 1st Live After Marriage 😍
- Ravindar-ஐ ஆசையா கொஞ்சி விளையாடும் Mahalakshmi 😍 Viral Couple-ன் Cute Romance 🥰
- 😍ONCE UPON A TIME THERE LIVED A GHOST✨MASS-ஆ தீ சாப்பிட்ட நம்ம FAT MAN😍
- Fatman Maha-க்கு Bad Comments, Kids பெத்துக்குறது அவங்க விருப்பம்- Insta Viral Pair Dhivyaa & Vikram
- Fatman Ravindran🔥 "Gelusil Ready பண்ணிக்கோங்க தம்பி" கடுப்பான Netizen-க்கு Fatman Thug Life Reply!
- "புருஷா, உன்னால தான் என் வாழ்க்கை அழகா மாறியிருக்கு"... Fatman உடன் Honeymoon-ல் Mahalakshmi 💞
- தங்கமான மனைவி MAHALAKSHMI-ய தங்கத்தால் அலங்கரித்து அழகு பார்த்த RAVINDRAN 😍
- FAT MAN Ravindran, VJ Mahalakshmi-க்கு திடீர் கல்யாணம் 😍 Love You Ammu
- "ரசிகர்கள் சண்டையிலேயே முடிந்த வாழ்க்கை..!" -'தல -யா..? A K -வா..?'
- "எப்பவுமே எங்களுக்கு 'தல' அஜித் தான்..!" -'தல -யா..? A K -வா..?'