www.garudabazaar.com

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ரஜினி.. வெளியான ஜெயிலர் படத்தின் GLIMPSE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயிலர் படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

Super Star Rajinikanth Jailer Muthuvel Pandian Arrives Teaser

Also Read | அப்பாவாகும் நடிகர் ராம் சரண்.. தாத்தா ஆகப்போகும் மகிழ்ச்சியில் சிரஞ்சீவி வெளியிட்ட அறிக்கை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தினை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் இந்த படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார்.

Super Star Rajinikanth Jailer Muthuvel Pandian Arrives Teaser

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து.

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கோகுலம் ஸ்டூடியோஸில் நடைபெற்றது.

Super Star Rajinikanth Jailer Muthuvel Pandian Arrives Teaser

ஜெயிலர் படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது.   இந்த படத்தின் உருவாக்க கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Super Star Rajinikanth Jailer Muthuvel Pandian Arrives Teaser

இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தின் Muthuvel Pandian Arrives என்ற முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது. வசனமின்றி அனிருத்தின் பின்னணி இசையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.  இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரும் ரஜினிகாந்த், வாகனத்தில் மிகப்பெரிய கத்தியை எடுத்து திரும்பி  சிரிப்பது  போல வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. நீல நிற உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வீடியோவில் தோன்றியுள்ளார்.

 

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்.. லால் சலாம் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Jailer Muthuvel Pandian Arrives Teaser

People looking for online information on Jailer, Rajinikanth, Rajinikanth Jailer Muthuvel Pandian Arrives Teaser, Super Star Rajinikanth will find this news story useful.