www.garudabazaar.com

"பெர்ஷனலா தான் இத பண்ணேன்".. மகாலட்சுமி கிட்ட நேரா சொன்ன தனலட்சுமி.. Start ஆகிடுச்சுப்பா!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசன், அடுத்தடுத்து பல விறுவிறுப்பு நிறைந்த சம்பவங்களால் சென்று கொண்டிருக்கிறது.

Dhanalakshmi and mahalakshmi in bommai task bb6 tamil

இதன் காரணமாக, மக்கள் மத்தியிலும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கு மத்தியில், மாறி மாறி சில போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்ததும் சமீபத்திய எபிசோடுகளில் அதிகம் பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது. சமீபத்தில், வார இறுதி எபிசோடில் வந்த கமல், போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, சச்சரவுகள் குறித்தும் அவர்களிடம் நேரடியாக பேசி இருந்தார்.

இதற்கு மத்தியில், முதல் இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜிபி முத்து, குடும்பத்தை பிரிந்து வாடுவதால், அவரே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து அதன்படி செயல்பட்டிருந்தார். அதே போல, சாந்தியும் முதல ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டிருந்தார்.

Dhanalakshmi and mahalakshmi in bommai task bb6 tamil

இதன் பின்னரும், அடுத்தடுத்த டாஸ்க்குகள் காரணமாக முழுக்க முழுக்க விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு தான் இருக்கிறது. இதனிடையே தற்போது புதிதாக ஆரம்பமாகியுள்ள பொம்மை டாஸ்க், பிக்பாஸ் வீட்டுக்குள் கடும் சண்டை மற்றும் சச்சரவுகளை தான் ஏற்படுத்தி உள்ளது. இந்த பொம்மை டாஸ்க் மத்தியில் இதுவரை பெரிய அளவில் சண்டை ஏதும் போடாமல் இருந்து வந்த மணிகண்டன், திடீரென ஆவேசத்துடன் போட்டியாளர்களிடம் பேசும் விஷயம், பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருந்தது.

அப்படி ஒரு சூழ்நிலையில், இந்த பொம்மை டாஸ்க் காரணமாக அடுத்து நடந்துள்ள சம்பவம் தொடர்பான ப்ரோமோவும் தற்போது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Dhanalakshmi and mahalakshmi in bommai task bb6 tamil

பொம்மை டாஸ்கின் போது, மகாலட்சுமி அவுட் ஆவது போல சூழல் இருப்பது போல தெரிகிறது. அப்போது, அவருடைய பெயர் கொண்ட பொம்மையை தனலட்சுமி கையில் வைத்துள்ளார். இது தொடர்பாக இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, "நீங்கள் பர்சனலாக செய்கிறீர்கள் என எனக்கு தோன்றுகிறது" என மகாலட்சுமி கூறுகிறார்.

இதற்கு பதில் தெரிவிக்கும் தனலட்சுமி, "பர்சனலாக தான் நான் செய்கிறேன்" என கூறியதும் "அப்ப சூப்பர்" என கூறிவிட்டு மகேஸ்வரி கடந்து செல்கிறார். டைரக்டாக நான் நாமினேட் செய்வேன் என்றும் தனலட்சுமி கூறுவது ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது.

Dhanalakshmi and mahalakshmi in bommai task bb6 tamil

நேரடியாக மகேஸ்வரி குறித்து தனலட்சுமி பேசும் விஷயங்கள் தொடர்பான ப்ரோமோக்கள் குறித்து இணையவாசிகள் பலரும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi and mahalakshmi in bommai task bb6 tamil

People looking for online information on BB6 Tamil, BiggBoss6 Tamil, Dhanalakshmi, Mahalakshmi will find this news story useful.