www.garudabazaar.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்.. லால் சலாம் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லால் சலாம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Lal Salaam Team Wishes Super Star Rajinikanth Birthday

Also Read | ரஜினி பிறந்தநாளில் A.R. ரஹ்மான் வெளியிட்ட UNSEEN வீடியோ.. மனுசன் ஆச்சர்யத்தில் மூழ்கிட்டாரு!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.  இந்நிலையில் லால் சலாம் படக்குழு சார்பில் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோற்றம் நிழல் தன்மையில் அமைந்துள்ளது.  "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சூப்பர் ஸ்டார்" என போஸ்டரில் படக்குழுவின் வாழ்த்து  இடம்பெற்றுள்ளது.

Also Read | அப்பாவாகும் நடிகர் ராம் சரண்.. தாத்தா ஆகப்போகும் மகிழ்ச்சியில் சிரஞ்சீவி வெளியிட்ட அறிக்கை!

தொடர்புடைய இணைப்புகள்

Lal Salaam Team Wishes Super Star Rajinikanth Birthday

People looking for online information on Aishwarya Rajinikanth, Lal Salaam, Lal Salaam Team, Lal Salaam Team Wishes Rajinikanth Birthday, Rajinikanth will find this news story useful.