www.garudabazaar.com

BIGGBOSS சீசன்-6 : போட்டியாளராக ரவீந்தர் & மஹாலட்சுமி? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6 தமிழ், இன்று அக்டோபர் 9  ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்  என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Biggboss Season 6 Tamil Contestants Ravindar Mahalakshmi Sources

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் தமிழில் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறும். கடந்த இரண்டு சீசன் மட்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நடைபெற்றது.

சமீபத்தில் முடிந்த ஐந்தாவது சீசனும் கடந்த 4வது சீசனை போல் கடந்த அக்டோபர் மாதம் தான் தொடங்கியது. இந்த பிக்பாஸ் சீசன் 24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Biggboss Season 6 Tamil Contestants Ravindar Mahalakshmi Sources

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான போட்டிகள்  வழங்கப்படும்.

இப்படி அனைத்து சவால்களையும் கடந்து, கடைசி வரை இருக்கும் நபர்களில் ஒருவர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முன்னதாக, அந்த வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ரவிந்திரன் & அவர் மனைவி நடிகை மஹாலட்சுமி கலந்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் ரவீந்தர் தனது முகநூல் பக்கத்தில் "எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் " என பதிவிட்டு இருந்தார். இதனால் ரவீந்தர் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக பங்கேற்க உள்ளார். இவரது மனைவி மஹாலட்சுமியும் கலந்து கொள்ள உள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Biggboss Season 6 Tamil Contestants Ravindar Mahalakshmi Sources

Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், FATMAN என்கிற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுவர். கடைசியாக ரவீந்தர் தயாரிப்பில் சாந்தனு பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது.

BIGGBOSS சீசன்-6 : போட்டியாளராக ரவீந்தர் & மஹாலட்சுமி? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss Season 6 Tamil Contestants Ravindar Mahalakshmi Sources

People looking for online information on Biggboss Season6, BIGGBOSS TAMIL, Fatman, Mahalakshmi, Ravindar will find this news story useful.