www.garudabazaar.com

VIDEO: ரவீந்தர் & மகாலட்சுமி வாங்கிய விலையுயர்ந்த கார்! அப்படி என்ன ஸ்பெஷல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரவீந்தர் & மகாலட்சுமி,  புதிய கார் வாங்கும்  வீடியோ வெளியாகி உள்ளது.

Ravindar Mahalakshmi Bought New MG Gloster Car

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோர் சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடிக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 90 ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார்.

Ravindar Mahalakshmi Bought New MG Gloster Car

தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். ரவீந்தர் சந்திரசேகரன், கூர்கா, சஙகத்தமிழன் ஆகிய படங்களை வினியோகம் செய்துள்ளார்.

ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் குறித்து Behindwoods-ல் தனது பார்வையை முன் வைக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் ரவீந்திர் வழங்கி வருகிறார். மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், இந்த பெயர் மூலம் மக்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானவர்.

Ravindar Mahalakshmi Bought New MG Gloster Car

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தம்பதியர் புதிய MG Gloster ரக காரை வாங்கியுள்ளனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து "வாழ்க்க முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்டி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா... அது பெரிய அதிர்ஷ்டம்.

அப்டி நமக்கு கிடச்ச பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடச்சா..... New wife, new life,new car..drive easy and be crazy" என மகாலட்சுமி பதிவிட்டுள்ளார்.

இந்த MG Gloster காரின் விலை 32 லட்சம் ரூபாய் முதல் 42 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. 2000 சிசி இன்ஜின் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிசன் கொண்ட இந்த கார் ஒரு லிட்டர் டீசலுக்கு 13 கிலோமீட்டர் மைலேஜ் தரவல்லது. 6 முதல் 7 நபர்கள் வரை பயணம் செய்யும் வசதி கொண்டது.

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது

தொடர்புடைய இணைப்புகள்

Ravindar Mahalakshmi Bought New MG Gloster Car

People looking for online information on Mahalakshmi, MG Gloster, Ravindar will find this news story useful.