இப்படி மாறி மாறி புகழ்ந்து தள்ளுறாங்களேப்பா - ப்ரியா பவானி ஷங்கர் - அமித் பார்கவ் செம ஜாலி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ப்ரியா பவானி ஷங்கரும் அமித் பார்கவ்வும் தங்களது நட்பை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். 

ப்ரியா பவானி ஷங்கர் அமித் பார்கன் நெகிழ்சி | priya bhavani shankar and amit bhargav shares their frienship

சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் ப்ரியா பவானி ஷங்கர். இதையடுத்து இவர் மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. இவர் தற்போது குருதி ஆட்டம், பொம்மை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று இவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது இவரிடம் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்த அமித் பார்கவ் பற்றி கேட்டதற்கு, ''அவர் ஒரு சின்சியரான நடிகர். இந்த துறையில் அவர்தான் எனக்கு முதல் குரு'' என பதிலளித்தார். இதையடுத்து அமித் பார்கவ், ''அப்போது எனக்கிருந்த கொஞ்சம் அறிவை வைத்து, எனக்கு தெரிந்தளவு உதவி செய்தேன், இப்போது ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இப்போது அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், நான் நிறைய கற்றுக்கொள்வேன்'' என தெரிவித்துள்ளார்.  

Entertainment sub editor