எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை - மயக்கும் ப்ரியா பவானி ஷங்கர் - ரெண்டு பேரும் செம ரொமான்ஸ்!.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராதாமோகனின் பொம்மை படத்தின் பாடலில் இருந்து புதிய ரொமான்டிக் ஸ்டிஸ் ஆன்லைனை கலக்கி வருகிறது.

எஸ்.ஜே.சூர்யா ப்ரியா பவானி ஷங்கரின் பொம்மை ரொமான்ஸ் ஸ்டில் | romantic stills from sjsurya priya bhavani shankar's bommai

மொழி, அபியும் நானும் படங்களை இயக்கியவர் ராதாமோகன். இவர் தற்போது பொம்மை என்கிற படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முதல் முறையாக யுவன்ஷங்கர் ராஜாவுடன் ராதாமோகன் இப்படத்தில் கை கோர்க்கிறார். பொம்மை படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொம்மை படத்தில் இருந்து புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாடல் காட்சியில் இருந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில் எஸ்.ஜே.சூர்யாவும் ப்ரியா பவானி ஷங்கரும் நெருக்கமாக இருப்பது போல எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மான்ஸ்டர் படத்தில் கலக்கிய இந்த ஜோடியின் புதிய புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்ஸ் குவிந்து வருகின்றன.

Entertainment sub editor