"எல்லா பேய்களும் இங்க தான் இருக்கு" - 'ப்ரியா பவானி ஷங்கர்' வெளியிட்ட பதிவு...!!
முகப்பு > சினிமா செய்திகள்செய்தி தொகுப்பாளராக இருந்து இப்போது நடிகையாக உயர்ந்திருப்பவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இவர் நடித்த மேயாத மான், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் ரசிகர்கள் அவரை கொண்டாடித் தீர்த்தனர். இவருக்கு குறுகிய காலத்திலேயே பெரிய ரசிகர் பட்ட்டாளம் உருவாகி உள்ளது.

இவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தை 1.9 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் அவர் "எல்லா பேய்களும் இங்கு தான் இருக்கின்றன" என்று கூறியுள்ளார். அவர் சுற்றுலா சென்ற அமியூஸ்மென்ட் பார்க்கில் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து இந்த தலைப்பை இட்டுள்ளார். மேலும் பிரமாண்ட நாற்காலி ஒன்றில் அமர்ந்திருப்பது போல இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றையும் இணைத்திருக்கிறார். இந்தப் பதிவை லட்சக்கணக்கான மக்கள் லைக் செய்துள்ளனர்.
சமீபத்தில் அவர் நடித்த மாஃபியா படம் ரிலீஸ் ஆனது. அடுத்ததாக குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, பெல்லி சூப்புலு ரீமேக், வான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.