ப்ரியா பவானி ஷங்கரின் க்ரஷ் ஆக்டர் யாரு தெரியுமா..? கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்.
முகப்பு > சினிமா செய்திகள்ப்ரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்ரஷ் ஆக்டர் குறித்து தெரிவித்துள்ளார்.
![ப்ரியா பவானி ஷங்கரின் ஆக்டர் க்ரஷ் | priya bhavani shankar opens about her actor crush ப்ரியா பவானி ஷங்கரின் ஆக்டர் க்ரஷ் | priya bhavani shankar opens about her actor crush](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/priya-bhavani-shankar-opens-about-her-actor-crush-news-1.jpg)
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் ப்ரியா பவானி ஷங்கர். இதையடுத்து இவர் மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. இவர் தற்போது குருதி ஆட்டம், பொம்மை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் அவரின் தமிழ் க்ரஷ் ஆக்டர் யார் என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, 'மிக நீண்ட காலமாகவும், இன்னும் தொடரும் அந்த க்ரஷ் மாதவன் தான்' என அவர் பதிலளித்துள்ளார்.
Tags : Priya Bhavani Shankar, Madhavan