யார் பிரியாணியை யார் சாப்புடுறான்னு சொல்லுங்க!! - மாப்ள ஹரிஷ் கல்யாண் பிரியாணி விருந்து.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தில் அவர் அணைவருக்கும் பிரியாணி விருந்து வைத்த ட்ரெண்டிங் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடித்த பியார் ப்ரேமா காதல், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இவர் தற்போது நடித்துள்ள தாராள பிரபு விரைவில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் தன்யா ஹோப், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் அடுத்து நடித்துள்ள படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக்காக இது உருவாகியுள்ளது. இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் நிறைவடைந்ததையடுத்து, ஹரிஷ் கல்யாண் மொத்த யூனிட்டுக்கும் பிரியாணி விருந்து வைத்துள்ளார். மேலும் இப்படத்தின் கதாநாயகி ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுந்தருக்கு ஹரிஷ் கல்யாண் பிரியாணி ஊட்டிவிடும் போட்டோ தற்போது லைக்ஸை குவித்து வருகிறது. மூவரும் மாற்றி மாற்றி ஊட்டிவிடும் அந்த போட்டோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
That biriyani sapadu served by our very own kalyana boy @iamharishkalyan in sets of #Pellichoopuluremake @thespcinemas @KaarthikkSundar @priya_Bshankar @Composer_Vishal pic.twitter.com/JX9eMNDZMB
— Done Channel (@DoneChannel1) February 27, 2020