கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு - அரசு அனுமதி கொடுத்தால் நான் ரெடி... அந்த மனசு தான் சார் கடவுள்
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனதது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களில் 4 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்களாம்.
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள வெளியில் வராமல் வீட்டிலேயே இருப்பது தான் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்து சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் விழிப்புணர்வு பதிவுகளை எழுதி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள பதிவில், ''இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.
உங்கள் நான்
— Kamal Haasan (@ikamalhaasan) March 25, 2020