கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பிரியா பவானி ஷங்கர், 'மேயாத மான்' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் கார்த்தியுடன் 'கடைக்குட்டி சிங்கம்', எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து 'மான்ஸ்டர்', அருண் விஜய்யுடன் இணைந்து 'மாஃபியா' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
![இந்தியன் 2வுக்குபிறகு ராகவா லாரன்ஸுடன் இணையும் பிரியா பவானி ஷங்கர் | After Indian 2 Priya Bhavani Shankar to act with Raghava Lawrence இந்தியன் 2வுக்குபிறகு ராகவா லாரன்ஸுடன் இணையும் பிரியா பவானி ஷங்கர் | After Indian 2 Priya Bhavani Shankar to act with Raghava Lawrence](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/2-after-indian-2-priya-bhavani-shankar-to-act-with-raghava-lawrence-music-by-gv-prakash-photos-pictures-stills.jpg)
தற்போது அவர், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2', எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து 'பொம்மை', ஹரிஷ் கல்யாணுடன் 'ஓ மணப்பெண்ணே', தெலுங்கில் 'அஹம் பிரம்மாஸ்மி' என அடுத்தடுத்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பிரியா பவானி ஷங்கர் அடுத்ததாக ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தை தயாரிக்கிறார்.