BREAKING : பிக்பாஸ் நடிகருடன் ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர்... இவ்ளோ 'ரொமான்டிக்' ஆன டைட்டிலா..?
முகப்பு > சினிமா செய்திகள்தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக உயர்ந்திருப்பவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இவர் மேயாத மான், மான்ஸ்டர், மாஃபியா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது புதுப் படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
![பிக்பாஸ் நடிகருடன் ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர் I Breaking Priya Bhavani Shankar To Pair With Big Boss Actor பிக்பாஸ் நடிகருடன் ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர் I Breaking Priya Bhavani Shankar To Pair With Big Boss Actor](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/i-breaking-priya-bhavani-shankar-to-pair-with-big-boss-actor-photos-pictures-stills.jpg)
சமீபத்தில் வெளியாகி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'தாராள பிரபு'. இந்தப் படத்தின் கதாநாயகனான ஹரிஷ் கல்யாண் உடன் அவர் ஜோடி சேர உள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
அப்படத்தின் தலைப்பு இன்னும் விசேஷமானது. ஆம் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் வரும் 'ஓ மணப்பெண்ணே' என்ற பாடலின் முதல் இரண்டு வார்த்தைகள் தான் படத்தின் தலைப்பு. மேலும் இந்த படம் விஜயதேவர்கொண்டா நடித்து தெலுங்கில் வெளியான 'பெல்லு சுப்புலு' படத்தின் ரீமேக் என்று கூறப்பப்டுகிறது.தலைப்பை பார்த்தாலே இது செம ஒரு காதல் கதையாக இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.