COBRA D Logo Top
www.garudabazaar.com

PRINCE படத்தின் முதல் சிங்கிள் பாடல்.. ஒளிப்பதிவு செஞ்சது இந்த விஜய் பட கேமராமேனா? ஆஹா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

Prince Movie First Single DOP Mersal Bigil GK Vishnu

Also Read | இரண்டு பாகங்களாக வெளியாகிறதா 'விடுதலை'? படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். 

Prince Movie First Single DOP Mersal Bigil GK Vishnu

மரியா ரியாபோஷாப்கா, போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் நடித்தவர். மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

Prince Movie First Single DOP Mersal Bigil GK Vishnu

பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு  ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வலிமை படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Prince Movie First Single DOP Mersal Bigil GK Vishnu

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் பிம்பிளிக்கா பிளாப்பி பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி கே விஷ்ணு, மெர்சல் மற்றும் பிகில் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

 

Also Read | கோப்ரா படத்தின் இதுவரை காணாத BTS.. 'ஜென்னி' மிருணாளினி ரவி பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Prince Movie First Single DOP Mersal Bigil GK Vishnu

People looking for online information on GK Vishnu, Prince, Prince Movie First Single, Sivakarthikeyan will find this news story useful.