COBRA D Logo Top
www.garudabazaar.com

Bimbiliki Pilaapi : வெளியானது பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிளின் 'Glimpse'.. "அட, பாடுனது இவர் தானா?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ, தற்போது வெளியாகி உள்ளது.

Sivakarthikeyan next prince first single glimpse released

Also Read | “மீண்டும் Vijay-ஐ வைத்து படம் எடுக்கும் SAC..?” - அவரோட பதில் இதுதான்.. Exclusive பேட்டி.

கடைசியாக டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் சாதனைகளை புரிந்திருந்தது.

தொடர்ந்து, அடுத்ததாக பிரபல இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan next prince first single glimpse released

பாண்டிச்சேரி மற்றும் இங்கிலாந்தின் லண்டன் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, சமீபத்தில், பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் ஒன்றும் வெளியாகி இருந்தது.

Sivakarthikeyan next prince first single glimpse released

அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதியன்று பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்திற்கு எஸ் தமன் இசை அமைத்துள்ள நிலையில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றி வரும் நிலையில், அருண் விஸ்வா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

Sivakarthikeyan next prince first single glimpse released

நாராயண் தாஸ் நரங், சுனில் நரங் ஆகியோரின் ஆசியுடன் புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோருடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியவற்றின் கீழ் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோவுடன் பாடகர்கள் விவரம் மற்றும் நாளை (01.09.2022) பாடல் வெளியாகும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sivakarthikeyan next prince first single glimpse released

"Bimbiliki Pilaapi" என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை இசை அமைப்பாளர் அனிருத், ரம்யா பெஹாரா, சஹிதி சகந்தி உள்ளிட்டோர் பாடி உள்ளனர். மேலும், இந்த பாடல் நாளை மாலை 4:05 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமன் இசையில், அனிருத் குரலில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் பாடலை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

Also Read | ஸ்வீடன் நடிகையுடன் தனுஷ்.. 'நானே வருவேன்' படத்தின் பனி சூழ்ந்த ரொமான்டிக் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan next prince first single glimpse released

People looking for online information on Prince Movie, Prince Movie Updates, S Thaman, Sivakarthikeyan will find this news story useful.