COBRA D Logo Top
www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் & மரியா நடிக்கும் 'PRINCE'.. தகதகவென மின்னும் புதிய போஸ்டர்! டிசைனர்‌ இவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

SivaKarthikeyan Prince Movie New Poster Released

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் தெறி அப்டேட்!

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த 'Don' படம் உலகெங்கும் வெற்றிகரமாக  (13.05.2022) அன்று ரிலீசாகி 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது.

டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

SivaKarthikeyan Prince Movie New Poster Released

இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். 

மரியா ரியாபோஷாப்கா, போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் நடித்தவர். மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கியது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 

பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு  ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வலிமை படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

SivaKarthikeyan Prince Movie New Poster Released

இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. தங்க மஞ்சள் நிற  உடையில் நவநாகரீக தோற்றத்தில் சிவகார்த்திகேயன் & மரியா ரியாபோஷாப்கா தோன்றியுள்ளனர். பின்னணி செட் அமைப்பும் தங்க நிறத்தில் அமைந்துள்ளது.

இந்த  போஸ்டரை பிரபல போஸ்டர் டிசைனர் சிவம் சி கபிலன் வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கனவே கோப்ரா, திருச்சிற்றம்பலம், நட்சத்திரம் நகர்கிறது, காட்பாதர், ஆர் ஆர் ஆர், விருமன், வாத்தி, வணங்கான், லைகர், ஜெயிலர், வெந்து தணிந்தது காடு, ராதே ஷ்யாம், சாணிக் காயிதம் படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்தவர் ஆவார்.

 

Also Read | இமயமலையில் பிரபல நட்சத்திர விடுதியில் அஜித்.. HOTEL ஒரு நாள் வாடகை மட்டும் இவ்வளவு ரூபாயா?

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Prince Movie New Poster Released

People looking for online information on Prince Movie, Prince Movie New Poster, Sivakarthikeyan, SivaKarthikeyan Prince Movie will find this news story useful.