www.garudabazaar.com

மனைவியுடன் சிவகார்த்திகேயன்!.. ஃபோட்டோவுடன் அவரே போட்ட க்யூட் ட்வீட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக தனது பயணத்தை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன், அதன்பின் தொகுப்பாளர், நடிகர் என மிக வேகமாக தன்னுடைய திறமையால் முன்னேறி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.

Sivakarthikeyan shares latest picture with his wife

கடைசியாக, சிவகார்த்திகேயன் நடித்திருந்த 'டாக்டர்', 'டான்' உள்ளிட்ட திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் மட்டுமில்லாமல், வசூல் ரீதியாகவும் நிறைய சாதனைகளை படைத்திருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். மேலும், அனுதீப் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படமும் தீபாவளி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sivakarthikeyan shares latest picture with his wife

இது தவிர, ரங்கூன் படத்தை இயக்கியதன் மூலம் அதிகம் கவனம் பெற்ற ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் புதிய திரைப்படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார்.

Sivakarthikeyan shares latest picture with his wife

அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், தனது  திருமண நாளில் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு, சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நிலையில், அவர்களுக்கு ஆராதனா என்ற மகளும் உள்ளார்.

Sivakarthikeyan shares latest picture with his wife

அப்படி இருக்கையில், தங்களின் 12 ஆவது திருமண நாளில், மனைவியுடன் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த ஜோடியை பாராட்டியும் வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan shares latest picture with his wife

People looking for online information on Sivakarthikeyan will find this news story useful.