சிம்பு, சீமான் கட்சில சேர்ந்துடுவாருனு நினைக்கிறேன் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் 'ஆர்கே நகர்'. இந்த படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்க சரவணராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Premgi Amaran said Simbu likely to join Seeman's party

இந்நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த  அனுபவம் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

எப்பொழுது பார்த்தாலும் மங்காத்தா 2 பற்றியே கேள்வி கேட்கிறார்கள். என் அண்ணனிடம் அஜித், விஜய், ரஜினிகாந்த் ஆகியோருக்கான ஸ்கிரிப்ட் தனியாகவும், அஜித்- விஜய், அஜித் - ரஜினிகாந்த் என இணைந்து படத்துக்கும் ஸ்கிரிப்ட் ரெடியாக இருக்கிறது என்று தெரிவித்தார். 

ரஜினிகாந்த், விஜய், அஜித், சிம்பு, வெங்கட் எந்த கட்சியில் சேருவார்கள் என்ற கேள்விக்கு சுவாரஸியமாக பதிலளித்துவந்த அவர், சிம்புவும் சீமானும் சேர்ந்து ஒரு படம் நடிக்கிறதா சொல்லிருக்காங்க. அவர் ஏற்கனவே தமிழ், தமிழர்கள்னு பேசுவாரு. அதனால சிம்பு, சீமான் கட்சியில சேர்ந்திடுவாருனு நினைக்கிறேன். என்றார்.

சிம்பு, சீமான் கட்சில சேர்ந்துடுவாருனு நினைக்கிறேன் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி வீடியோ