பிரபல மலையாள நடிகர் சன்னி வெயின் தனது காதலி ரஞ்சனி குஞ்சு என்பவரை கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் இன்று காலை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் கலந்துக் கொண்டனர். தனது திருமண புகைப்படத்தை சன்னி வெயின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து, பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து நண்பர்களும், திரையுலக பிரபலங்களும் பங்கேற்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மலையாளத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்த ‘செகண்ட் ஷோ’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சன்னி வெயின்.
சன்னி வெயின் தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சன்னி வெயின் அறிமுகமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.