தமிழ் சினிமாவினருக்கு என் மதிப்பு தெரியவில்லை - நடிகை ஆண்ட்ரியா ஆதங்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிப்பவர். அந்த வரிசையில், தற்போது அதிரடி காவல்துறை அதிகாரியாக ‘மாளிகை’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Actress Andrea Jeremiah felt bad on Tamil film industry didnt recognise her value

சாந்தி பவானி எண்டர்டெய்ன்மென்ட் சார்பாக கமல்போரா மற்றும் ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தில்.சத்யா இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது அதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகை ஆண்ட்ரியா, முதலில் கன்னடத்தில் எடுக்க வேண்டிய படம் இது, ஆனால், ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு என தோன்றியதால் இந்த படத்தை தயாரிப்பாளர் தமிழில் எடுக்கச் சொன்னார்.

ஒரு பாலிவுட் தயாரிப்பாளருக்கும், கன்னட இயக்குநருக்கும் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்பது தெரிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு அப்படி ஏதும் தோன்றவில்லை என்றார்.

மேலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட நடிகர் ஜே.கே-விற்கு நன்றி தெரிவித்த ஆண்ட்ரியா, இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன் என கூறி படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் சினிமாவினருக்கு என் மதிப்பு தெரியவில்லை - நடிகை ஆண்ட்ரியா ஆதங்கம் வீடியோ