சிம்புவின் சகோதரர் குறளரசனுக்கு திருமணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன். இவர் குழந்தை நட்சத்திரமாக 'சொன்னால் தான் காதலா' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார், மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடித்த இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

STR's brother Kuralarasan marriage Date is April 29

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தன் பெற்றோர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இவர் இஸ்லாம் மதத்தில் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ளவே அவர் அந்த மதத்துக்கு மாறியுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அதற்கு அவரது தந்தை டி.ராஜேந்தர் மறுப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து சில நாட்களுக்கு முன் குறளரசனின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் சகோதரர் விஜய டி. ராஜேந்தர் அவர்கள் எனது இல்லத்தில் மகன் குறளரசன் அவர்களின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

திரையுலகில் இருவரும் இணைந்து பயணித்த நாட்களை நினைவு கூர்ந்தோம். குறளரசன் இல்லறம் சிறக்க எனது வாழ்த்துகள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.  சிம்புவின் இளைய சகோதரரான குறளரசன், நபீலா ஆர்.அஹமத் என்கிற பெண்ணை வருகிற ஏப்ரல் 29 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள விருக்கிறார். இவரது திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.