சர்வதேச அளவில் வெளியாகும் பாகுபலி ஸ்டாரின் படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் பிரபாஸ். 'பாகுபலி' படத்துக்கு பிறகு இவர்  இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் பிரபலமானார்.

Prabhas starrer Saaho gets distribution rights in Japan

தற்போது இவர் 'சாஹோ' என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்க, நடிகர் அருண் விஜய் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை சுஜித் இயக்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் புரோமோத் ஆகியோர் யுவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.

இந்த படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜப்பானில் வெளியாகவுள்ளது. இதன் காரணமாக படத்தை அங்கு பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு பிரபாஸ் ஜப்பான் சென்று ரசிகர்களை சந்திக்கவிருக்கிறாராம்.