தல படத்துக்கு இசையமைக்கும் இசை சுனாமி - மனம் திறந்த மங்காத்தா இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித்தை வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு உருவாக்கவிருக்கும் ‘மங்காத்தா 2’ திரைப்படத்திற்கு இசை சுனாமி இசையமைப்பது குறித்து இயக்குநர் மனம் திறந்து பேசியுள்ளார்.

Isai Tsunami Premji to compose music for Thala Ajith's Mankatha 2- Director Venkat Prabhu Opens up

தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட்.10ம் தேதி ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஷூட்டிங் சமயத்தில் தல அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு அது பற்றிய சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துக் கொண்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் சார் உடனான சந்திப்பில் நிறைய விஷயங்கள் பற்றி பேசினோம். அவை ஒவ்வொன்றும் தகுந்த நேரத்தில் வெளிவரும் என தெரிவித்தார்.

அஜித்துடன் இணைந்து ஒரு படம் உருவாக்க திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்த நிலையில், அந்த படத்தில் அவரது தம்பி இசை சுனாமி பிரேம்ஜி இசையமைத்தால் அவருக்கு என்ன புனைப்பெயர் கொடுக்கபடும் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த இயக்குநர் ‘இசை சுனாமி’, ‘இசை டக்கீலா’, வரிசையில் மங்காத்தா 2 உருவானால் அதற்கு பிரேம்ஜி இசையமைத்தால் ‘இசை சூதாடி’ என்ற பட்டம் கொடுக்கப்படும் என்றார். இதைத் தொடர்ந்து, பிரேம்ஜி தான் மங்காத்தா 2 இசையமைப்பாளரா என ரசிகர்கள் யாரும் சண்டைப்போட வேண்டாம்.. ரசிகர்கள் விரும்பும் அஜித்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணியே கடவுள் மனது வைத்தால் இணையும் எனக் கூறினார்.

தல படத்துக்கு இசையமைக்கும் இசை சுனாமி - மனம் திறந்த மங்காத்தா இயக்குநர் வீடியோ