தல அஜித்துடன்... எனக்கு இன்னும் அந்த பயம் போல - பரவசத்துடன் பகிரும் பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் 'ஆர்கே நகர். இந்த படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்க, சரவணராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Vaibhav shares his experience with Ajith and Rajini including his RK Nagar

இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படம் குறித்தும் பல்வேறு அனுபவங்கள் குறித்தும் நடிகர் வைபவ் Behindwoods TV க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து பேசிய அவர், இந்த படத்தில் நடிப்பதற்காக சென்ற என்னை ரஜினி சார் என்ன இந்த பக்கம் என்று கேட்டார். அதற்கு நான்,  ஒரு பாட்டுக்கு நடிக்க வந்தேன் என்றேன். ஏன் பாட்டுக்கு படத்தில் நடிக்கலாமே என்றார். அதற்கு நான், கார்த்திக்  சுப்புராஜ் வாய்ப்பு தரவில்லை என்று சொன்னேன். 

பின்னர் பாடலில் நடனமாடும் போது இப்படி திரும்புங்க. நான் திரும்பும் போது என்ன பாருங்க. அப்பதான் எடிட்டிங்கில் தூக்கமாட்டார்கள் என்று அறிவுரை சொன்னார். அதனைத் தொடர்ந்து மங்காத்தா 2 குறித்து பேசும்போது, மங்காத்தா படத்தில் நாங்கள் எல்லாம் இறந்துவிடுவோம். எனவே எங்களால் மங்காத்தா 2 வில் நடிக்க முடியாது. வேற ஒரு படத்தில் அஜித்துடன் நடிக்க வேண்டும்.

பைக் ஸ்டண்ட் சீனில் அஜித்துடன் நடிக்கவேண்டி வந்தால், அவரை மட்டும் பைக் ஓட்ட சொல்லிவிட்டு, நான் பின்னால் அமர்ந்துவருவது போல் கரீன் ஸ்கீரினில் நடிப்பேன். ஏழு எட்டு வருஷம் ஆச்சு. ஆனா எனக்கு இன்னும் அந்த பயம் போல என்றார்.

தல அஜித்துடன்... எனக்கு இன்னும் அந்த பயம் போல - பரவசத்துடன் பகிரும் பிரபல நடிகர் வீடியோ