நடிகர் வைபவ் நடித்துள்ள ‘ஆர்.கே.நகர்’ திரைப்படத்தின் ரிலீஸுக்கு வந்த சிக்கல் குறித்து பிரபல இயக்குநரும், படத்தின் தயாரிப்பாளாருமான வெங்கட் பிரபு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் சரவண ராஜன் இயக்கியுள்ளார்.
வெங்கட்பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திரைப்படம் வரும் ஏப்.12ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
‘ஆர்.கே.நகர்’ படக்குழுவினர் அதற்கான புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தேர்தல் முடிந்த பிறகே ‘ஆர்.கே.நகர்’ வெளியாகும்.
இது அரசியல் படம் இல்லை என்ற போதிலும், நாங்கள் செய்யாத ஒரு தவறுக்காக சற்றும் எதிர்ப்பார்க்காமல் இந்த பிரச்சனை வந்திருப்பதாக கூறினார். யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. இந்த படத்திலும் யாரையும் தவறாக சித்தரிக்கவில்லை என வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார்.
இறுதியாக, தல பாணியில் சொல்ல வேண்டும் என்றால், வாழு வாழ விடு என வெங்கட் பிரபு வீடியோவில் கூறியுள்ளார். எனவே, தேர்தல் முடிந்த பிறகு தான் ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம் வெளியாகும் என்றும், புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Thank for the love and support!!! 🙏🏽🙏🏽 @blacktktcompany @badri_kasturi @saravanarajan5 @actor_vaibhav @Premgiamaren @Cinemainmygenes @subbu6panchu @vasukibhaskar @Nitinsathyaa @Aishwarya12dec #RKNagar pic.twitter.com/y4AR0zYC4p
— venkat prabhu (@vp_offl) April 9, 2019