பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவந்த நாடாளுமன்றத் தேர்தல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மே 23 ஆம் தேதி அனைத்து தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அளவில் பாஜக கூடட்ணி முன்னிலை வகித்துவருகிறது. தமிழக அளவில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த தொகுதியில் திமுக சார்பாக தமிழச்சி தங்கபாண்டியனும் அதிமுக சார்பாக ஜெயவர்தனும் போட்டியிட்டனர். மேலும் இந்த தொகுதியில் மொத்தம் நோட்டாவையும் சேர்த்து 40 பேர் போட்டியிட்டனர்.
தற்போது வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் 425 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் 21 பேர் இவருக்கும் குறைவாக வாக்குகள் பெற்றுள்ளனர். ஆனால் நோட்டா இந்த தொகுதியில் 11,002 வாக்குகள் பெற்றுள்ளது.